30
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
விட்டுவிட்டது எனலாம். மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது நமக்கும், பேரவைக்கும், கிறித்தவ மதத்தின்பால் வெறுப்புணர்ச்சி இல்லையானாலும் கிறித்தவ மத நிறுவனங்களின் மதமாற்றச் செயல்களை எதிர்க்கும் உணர்வு இருந்தது. கிறித்தவமத இயக்கங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட தென்கோடி மாவட்டத்தில் மாநாடு நடத்துவதென்று பேரவை முடிவு செய்தது. நாகர்கோயிலில் மாநாட்டை நடத்தினோம். அந்தச் சமயத்தில் கிறித்தவ மிஷனரிகளின் பள்ளி நடைமுறைகளை எதிர்த்து நெல்லை மாவட்டத்தில் இரண்டு நடுநிலைப் பள்ளிகளை நமது நிர்வாகம் தொடங்கியது. இந்தச் சந்தர்ப்பத்தில் பேரவையை நிலையான நிறுவனமாக்கவேண்டும் என்றும், அதற்கு நிலையான நிதிவாயில்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கருத்துத் தோன்றியது. தமிழ்நாடு அரசை அணுகிப் பேரவையை ஒருசட்டப் பூர்வமான நிறுவனமாக ஆக்கும் படிக் கேட்டுக் கொண்டோம். அது போலவே ஆணையர் அவர்களின் மாற்று ஆணை பெறாமல் நிதி நிலைத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்துகொண்டு, பேரவைக்கு நிதியளிப்பதை நமது எல்லாச்சமய நிறுவனங்களும் ஏற்கும்படி செய்யச் செய்தோம். சட்டமன்றத்தில் இந்தச் சட்ட வரைவுகள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப் பெற்றன. இந்தச் சூழ்நிலையில் காஞ்சி காமகோடி பீடம் புதிய பெரியவரிடமிருந்து பேரவை வளர்ச்சி பற்றிய தகவல்கள் கேட்டுத் தூதுவர்கள் வர ஆரம்பித்தார்கள். நம்மிடத்திலும் வந்து பாராட்டிச் சொன்னார்கள். பேரவையின் செயலாளரை அவர்கள் விருப்பத்தின்படி இரண்டொருதடவை சென்று பார்க்கும் படிச் செய்தோம். பேரவைச் செயலாளரிடம் பேரவைப் பணிகளைப் பலபடப் பாராட்டி, பேரவைப் - பணிகளை எல்லாரும் சேர்ந்து செய்ய விரும்புவதாகவும், நம்முடன் கலந்துபேச விரும்புவதாகவும் புதிய பெரியவர்கள் சொல்லி யனுப்பினார்கள். நாமும் சென்று சந்தித்தோம். மகிழ்ச்சி