பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

427


வற்றைக் கொண்டு, நிலையானவற்றை அடைதலே வாழ்க்கையின் குறிக்கோள்.

நன்றாக வாழவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு விதி தனியாக இல்லை. எதைச் செய்தாலும், அழகாகச் செய்தலும், பயனுறச் செய்தலுமே நல்வாழ்க்கை. குறித்த ஒரு நோக்கத்துக்காகத்தான் வாழ்க்கையை நடத்தவேண்டும். குறிக்கோளுடைய வாழ்க்கையை நடத்துவதுதான் அதிர்ஷ்டம். வாழ்க்கை முழுவதும் விரும்பக் கூடியது ஊழியம் புரியும் சக்தியேயாம். அதுவும் சுயநலமற்ற நிலையில் ஊழியம் புரியும் சக்தியாக அமைய வேண்டும்.

வாழ்க்கையை முறையாக வாழ்ந்தால், உழைப்போடு கூடிய வாழ்க்கை நடத்தினால், அவ்வாழ்க்கையே ஒரு தொழில்தான். வாழ்க்கை இன்பமானது அன்று; இன்பமாக அமையவும் அமையாது. தைரியத்தோடும், துணிச்சலோடும் வாழ்க்கையை நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொள்வதிலும், அல்லது கொலை செய்வதிலும் தைரியம் என்பது இல்லை. வாழ்வதில்தான் தைரியம் இருக்கிறது.

உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி, இவற்றை விருப்பும், வெறுப்பும் இன்றி அனுபவிக்கத் தெரிந்துகொண்டால் மனிதனாகலாம். வாழ்க்கையின் உந்து சக்தி நம்பிக்கை. நோக்கம், கடமை, பரிவு ஆகியன வாழ்க்கைக்கு ஒளியூட்டுவன. வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும்; யாராவது ஒரிவரிடமாவது அன்பு காட்ட வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றிகளை நம்பிக்கையுடன் எதிர் பார்க்க வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக் கொண்டால் அது வாழ்க்கையாகி விடும். ஏன்? இத்தகு வாழ்க்கையே வாழ்வாங்கு வாழ்தல். ஒரே ஒருமுறைதான் பிறக்கின்றோம். என்றாவது ஒருநாள் மூச்சுவிட மறந்து போவோம்; அல்லது