பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமக்காகக் காத்துக் கொண்டும் நிற்காது. வாய்ப்பு இருக்கும் திசையை நாடுங்கள்! எது வாய்ப்பு - நல்வாய்ப்பு என்று இனங்கண்டு கொள்ளும் திறமை வேண்டும்.

வாய்ப்புகளைத் தேர்வு செய்து ஏற்பதில்தான் வெற்றி இருக்கிறது. வாய்ப்புக்களைக் கவனிக்காமல் அதனைத் தாண்டி நாம் போய்விடக் கூடாது. அதுபோலவே நம்மைத் தாண்டி வாய்ப்பு போக அனுமதிக்கக் கூடாது. "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி, மதித்திடுமின்!” உளதாகும் சாக்காட்டை விரும்புங்கள்! வளருங்கள்! வாழுங்கள்!

ஒரு நாடு நல்ல குடிமக்களைப் பெற்றிருந்தால்தான் அந்நாடு வளரும்! புகழ்பெறும்! இன்று நமது நாட்டில் குடிமக்கள் தகுதி பெற்றவர்கள் மிக மிகச் சிலரே. 10 விழுக்காடு கூட இருக்க மாட்டார்கள். நாட்டுப் பற்றும், எல்லோரும் இந்தியர் என்ற உணர்வும் இன்று அருகி வருகிறது. நாட்டுக்காக அரசியல் என்பது போய், தனது ஆதாயத்துக்காக அரசியல் என்பதாகி விட்டது.

அன்று அன்னியர்கள் சுரண்டினார்கள். இன்று இந்தியர்களே இந்தியாவைச் சுரண்டுகிறார்கள். இந்த அவலம் எளிதில் அகலாது. பொது மக்கள் கருத்துத் திரண்டால், பொதுமக்கள் இதுபற்றி பேசினாலே கூட அகலும். பொது மக்களிடத்தில் அரசியல், சமூக விழிப்புணர்வுகளை உண்டாக்குங்கள் ! போர்க் குணத்தை உருவாக்குங்கள்!

சுதந்திர தினப் பொன்விழா வரப்போகிறது. இன்னமுமா வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வது? நமது நாட்டு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தவித்தும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட அமையாத வாழ்க்கையில் ஒரு புழுவென நெளிந்தும் எத்தனை ஆண்டுகள் வாழ்வது? நெடுந்துயிலிலிருந்து விழித்துக் கொள்! பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்கு! தன்னை நாடிக் கேட்பவர்களுக்கும், ஏதாவது