34
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பற்றி எண்ணித் திட்டமிடப் பெற்றது! இந்தப் பணிகளின் வளர்ச்சி, அதில் ஏற்பட்ட ஆர்வம், விருப்புக்கும் வெறுப்புக்கும் பலியாகக் கூடிய மேடைப் பேச்சுக்குச் செல்லும் நமது ஆர்வத்தைக் குறைத்தது. நீண்ட நெடுநாட்களாகச் சமுதாயத்தில் தீர்வு காணப் பெறாதிருக்கும் பல்வேறு ஆழமான பிரச்சனைகளில் வறுமை நீக்கம் சமூக உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த முடிந்தது. இதனுடைய வளர்ச்சிப் போக்கில் “கிராமநலத் திட்டக்குழு" தோன்றியது. இப்பணிக்குக் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் முன்வந்து கைகொடுத்து உதவி வருகின்றனர். விஞ்ஞானம் விவசாயிகளிடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அமரர் நேருஜியின் வாக்கினை இன்று காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் செயல்படுத்துகின்றனர். இவர்களுடைய அறிவுக் கொடைக்கு ஏது கைமாறு: தமிழ்நாடு அரசு போதிய ஆதரவு காட்டிவருகிறது. பல கிராமங்கள் ஏற்புத்திட்டத்தின் கீழ் வந்தன! தொழிற்புரட்சிக்கு வித்திடப் பெற்றது. நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பெற்றது. சோசலீச சமுதாய அமைப்புக்கு முதற்படியாகக் கூட்டுடைமைச் சமுதாயம் அமைக்கப்பட்டு வருகிறது! இந்தப் பணியில் ஒரு "ஆன்ம திருப்தி இருக்கிறது! குன்றக் குடி 1985-ல் தன்னிறைவு பெற்ற கிராமமாக உருக்கொள்ளும்! இந்தப் பணியைப் பாராட்டி எழுதி முன்னாள் பாரதத் தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் ஊக்கப்படுத்தி னார்கள். நடுவணரசின் திட்டக்குழு ஆலோசகர்கள் "இந்திய நாட்டுக்கு இஃது ஒரு முன்மாதிரியான பணி" என்று பாராட்டினார்கள். நம்முடைய வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று உறுதிப்படுகிறது. இந்த நிலையில் முதற்சுற்றை முடிக்கின்றோம்.
இனி அடுத்த சுற்றில் நிகழப் போவது என்ன? ஐயத்திற்கே இடமில்லை! இனி எண்ணச் சிதறல்கள், பிசிறல்கள் நம்முடைய வாழ்க்கையில் தலைகாட்ட வாய்ப்