பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



பல்வேறு சீரிய தலைப்புக்களின் கீழ் உரைகள் அமைந் திருக்கின்றன. அடிகளார் எடுத்துக் கொண்ட பொருளைத் தமக்கேயுரிய சிறப்பான நடையில் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டுகிறார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் அழகு முறையை அடிகளார் பாராட்டும் தகைமையில் கையாண்டுள்ளார்கள்.

தமிழ்ப் பெருங்குடி மக்களின் சிந்தனையைத் துரண்ட இந்த நூல் நல்ல முறையில் பயன்படும் என்பது திண்ணம். நூலை வெளியிட முன்வந்த பதிப்பாசிரியர் திரு. சீனி திருநாவுக்கரசு அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

இரா. நெடுஞ்செழியன்

சென்னை
24-6-75

8. மனம் ஒரு மாளிகை
1978 வைகாசி அணிந்துரை
சிலம்பொலி, சு. செல்லப்பன், எம்.ஏ.பி.டி.,


'மனம் போல வாழ்வு' என்பர் ஆன்றோர். மனத்தின் அடிப்படையிலேயே ஒருவர்க்கு வாழ்வும் தாழ்வும் ஏற்படுகின்றன. மனநலம் நல்வாழ்வைத் தருகின்றது. மனக் கோட்டம் தன்னைக் கெடுப்பதோடு தன்னைச் சார்ந்தோரையும் கெடுக்கின்றது. இதற்கு வரலாறுகள் மிகுதியும் உண்டு. அப்படியானால் நல்வாழ்வு வாழ உதவும் மனநலத்தை எல்லோரும் கடைப்பிடித்தால் என்ன?

கரும்பிருக்க இரும்பு கடித்துச் சிலர் ஏன் கலக்கமுறு கின்றனர்? விளக்கிருக்க மின்மினியில் தீக்காய்ந்து சிலர் ஏன் வாடுகின்றனர்? நல்ல வாழ்வு நீக்கி அல்லலுற்ற வாழ்வு கொண்டு ஏன் அயருகின்றனர்? எல்லாவற்றிற்கும் காரணம்