பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

475


மனநலம்-மனவளம் இன்மையே. அம்மனநலம்-வளம் எளிதில் அமைந்து விடாது. அதற்கு மிகுந்த பயிற்சி தேவை; கட்டுப்பாடு தேவை; இன்னல்கட்கு தளரா இரும்புள்ளம் தேவை. எனினும் பிறரின்னல் கண்டு உருகும் கரும்புள்ளமும் தேவை.

இவ் வழிமுறைகளால் மனநலத்தை-வளத்தை அடைவது அடைய முயல்வதே நல்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய உயர்வழியாம். நிலையில்லா மனத்தை நிலை நிறுத்தி நிலையான வாழ்வு வாழ்வதே அறிவுடைமை. இதைத்தான் 'மனமென்னுங் குரங்காட்டி திரியுமென்னை' ஆட்கொள்ள வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார் வள்ளலார். 'மனம் எனும் தோணி' பற்றி நான் அலைக் கழியாது அருள வேண்டும் என்றார். அப்பர் பெருமான். "இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நின்பால் உள்ளம் விடலறியேன்”- ஆகத் திரியும் என்னை ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்றார் மணிவாசகர்.

உண்மையான உயர்ந்த நல்வாழ்வுக்கு மனவளமே மூலகாரணம் என்பதனைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். காரண காரியத் தொடர்போடு நிலைநிறுத்தி, வழிமுறைகள் கூறி குறிக்கோள் கொண்ட உயர்வாழ்வு வாழ வழிவகுத்து உதவுவதே தவத்திரு அடிகளாரின் 'மனம் ஒரு மாளிகை' என்னும் இவ்வரிய நூல். மனத்தை மாளிகையாக்க வேண்டும் என்பதே இவர்தம் சிறந்த குறிக்கோள். அதற்குரிய பல முயற்சி களையும் தெளிவாய் விளக்கிச் சொல்கிறார் நம் அடிகளார்.

அன்புள்ளம் பெற்றுவிட்டால் பின் பெறவேண்டியது என்னே? எனவே, 'மனித உலகம்.அமைதியாகக் கூடிக் கலந்து சிரித்து மகிழ்ந்து வாழ அன்பே தேவை. அன்பு நெறியில் மனித உலகம் வாழும். அதனால் இந்த மண்ணகம் சொர்க்கம்' ஆகும் (பக் 11) என்று தெளிவுறுத்துகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்றெடுத்துரைத்து அறிவைப்