பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

479


பொழிவை நேரில் கேட்கும் உணர்வைப் பெற்று மகிழ்கிறோம்.

இத்திறன் அவர்க்கே வாய்த்த அரிய பேறு. இத்தரு சிறப்புகள் யாவும் ஒருங்கே அமைந்து இந்நூலை அணி செய்கின்றன. எனவே, மனப்போராட்டங்களால் மாளாத்துயர் கொள்ளும் இன்றைய சமுதாயத்தின் மனத்தை, ஒரு மாளிகையாக்கி உயர்வாழ்வு வாழ வழிசொல்லும் அழகுத் தமிழ் நூல் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அடிகளாரின் மனமாளிகைக்குள் நுழைய ஒரு நுழைவு வாயிலாக அழகிய முறையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ள நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு நம் நன்றி உரியதாகும். இந்நுலின் நோக்கம் இனிதே நிறைவேற தமிழ்த் தாய் வாழ்த்துவாளாக!

சிலம்பொலி, சு. செல்லப்பன், எம்.ஏ.பி.டி.


9. திருவள்ளுவர்


1981

டாக்டர் நா. பாலுசாமி,
எம்.ஏ., பி.எல்., எம்.லிட், பிஎச்.டி.
தமிழ்த்துறைத் தலைவர்
அண்ணாமலை நகர்,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
22—11—81


அணிந்துரை


ஆண்டுதோறும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பற்றிய மூன்று சொற்பொழிவுகளைத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1979ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளனர். வாழ்வியல்,