பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



புத்தகம் கைகளுக்கு அணிகலம்' என்பது ஒரு வாக்கியம். நாட்குறிப்பேடு இந்த இடத்தை இந்நாளிற் பெற்றது. நாட்குறிப்பேடுகள் பற்பல அமைப்புடையவை. நீதி மன்றக் கையேடு, ஆயுள் காப்பீட்டுக் கழகக் கையேடு அவ்வத் துறைச் செய்திகளைத் தொகுத்துத் தருவன. சமய இலக்கியங்கள் எனப்பெறும் சிவனடியார்களை அடிப்படையாகக் கொண்ட நாட்குறிப்பேடு அமைத்து, இன்று கண்ணப்ப நாயனார் என்ற சமய இலக்கிய நாள் என்று நினைவு கொள்வது மட்டுமன்றி, அவர் மேற்கொண்ட வாழ்வை, இந்நாளில் எத்தகைய தொண்டாக அமைத்துச் செயற்படுத்தலாம் எனச் செயல் திட்டமும் இயக்க வடிவும் அமைத்து வாழ்ந்து வரும் சமயத் தலைவர், என்னறிவு சென்றளவில் யானின்று அறிந்தபடி, வேறு எந்த உலக குருவோ, சமயத் தலைவரோ இல்லை. 63 நாயன்மார்களையும் தம்மைப் போலவே தம் கோயிலில் இருப்பிடமளித்த சிவன், தனித்தனி இடமே அளித்தான். 63 சமய இலக்கியங்களையும் நடைமுறைப் படுத்திய ஒரே ஒரு நாயனார்தான் உலகத்தில் உண்டு. அவரே சமய இலக்கியங்களாக நின்ற சிவனடியார்களைத் தம்முள்ளே இயக்கவழியில் செயல்படுத்திய தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதனாலேயே, சமயம் என்ற சொல்லுக்குச் சமுதாயநலம் என்பதே பொருளாயிற்று.

"சமயம்" என்ற சொல்லுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட வாழ்வியற் கோணங்களில் நின்று இயல்வரையறை செய்யப் பெற்றுள்ளது. சமயம் என்பது வாழ்க்கைமுறை. மனிதனின் சராசரித் தகுதியுடைமையை வரையறுக்கும் அளவுகோல்; மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக்கி, முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே மலர்ந்தது சமயம் என்பது அடிகள் அமைக்கும் விளக்கம்.

அடிகள் சிந்தனை ஓட்டத்தை விரைந்து பற்றுதல் எளி தன்று. உலகச் சிந்தனையாளர்கள் மூவகைப்படுவர். வரலாறு தழுவிய சிந்தனையாளர்கள், பரிணாம வளர்ச்சியைத் தழுவிய சிந்தனையாளர்கள். நிகழ்காலக் கணிப்பிலிருந்து