பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


பான்மை பரவி நின்ற சூழலில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த வையகத்தே' என்று பாடிய திருநாவுக்கரசரும், "கண்மூடிப் பழக்கமெலாம் மண் மூடிப் போக” என்று குரலெழுப்பிய இராமலிங்கரும் புரட்சியாளர்களேயாவர். எனவே அடிகளார் தம் புதுமை உணர்வுகள், வழி வழி வரும் தமிழ்ச் சமய உலக மரபின் தொடர்ச்சியே யாகும்.

இந்நூல் 28 தலைப்புகளில் அடிகளாரின் சிந்தனை களைத் தொகுத்து அளிக்கிறது. இன்றைய சமுதாயத்தை எதிர் நோக்கும் பல பிரச்சினைகளைப் பற்றி தமது கருத்துக்களை வெளியிடுகிறார். அவருக்கே இயல்பான அணுகுமுறை ஆங்காங்கு ஒளிவிடுகிறது.

"இன்று துறவிற்கும் உழைப்பிற்கும் தொடர்பில்லை என்று சிலர் கருதுகின்றனர்.ஞான வாழ்க்கைக்கும் தளராத உழைப்புத்தான் தேவை" என்ற அவரது கருத்து ஆராயப்பட வேண்டிய ஒன்று. மனித வாழ்வின் வளர்ச்சிக்கும், நிறை விற்கும் துணை நிற்பன, "அறிவும், அன்பும்." இவற்றைப் பற்றி அடிகளார் அழகாகப் பின்வருமாறு கூறுகிறார்:

"அறிவின் சீலம் அன்பு, அன்பின் செயற்பாடு இரக்கம்" எந்தச் சூழ்நிலையிலும் போர் தீமையான ஒன்றே என்ற அணுகு முறையினை அடிகளார் ஏற்கவில்லை.

"தீயவற்றோடு பகை கொண்டு எதிர்த்துப் போராடுதல் வாழ்வின் நோக்கமாக அமைதல் வேண்டும்..மனிதத் தீமையை எதிர்த்துப் போராடியவர்கள் தீர்க்கதரிசிகள் ஞானிகள்; கொடிய ஆதிக்க வெறிபிடித்த குடிநலம் போன்ற அரசர்களை எதிர்த்துப் போராடியவர்களும் அரசியல் ஞானிகள் என்றே பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிறார். ஒவ்வொரு தலைப்பிலும் அடிகளாரின் தனிச் சிந்தனையும் ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் ஒளிவிடுகின்றன. படிப்பவர் மிகுதியும் பயன் பெறுவர். தமிழகம் படித்துப் பயன்பெற வேண்டும் என விழைகிறேன்; பயன் பெறும் என நம்புகிறேன்.