பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


அடிகளார் நினைவலைகள்

(குமுதம் – 1992 சனவரி அடிகளார் தயாரிப்பு)

சிவகங்கை மன்னர் வருகிறார்


பொதுவாகத் திருமடத்தில் வசதி படைத்தவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் தனி விருந்து. சாதாரண மக்களுக்கு-கிராமப்புற விவசாய மக்களுக்கு இரண்டாந்தர உணவு வழங்குவது வழக்கம். இந்த முறையை நாம் விரும்பவில்லை. நிர்வாகிகளுக்கு இதனை அறிவிக்க ஒரு யுக்தி செய்தோம்.

ஒருநாள், 'சிவகங்கை மன்னர் வரப் போகின்றார். மதியம் விருந்து தயாரியுங்கள்' என்று உத்தரவு இடப்பட்டது. மடம் சுறுசுறுப்பாக இயங்கியது சுவையான உணவு சமைத்தார்கள். மடத்து முகப்பு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. சிவகங்கை மன்னரை வரவேற்க ஆயத்தம். மணி பகல் 12. ஆனாலும் சிவகங்கை மன்னர் வரவில்லை. நமது மடத்து விவசாயிகள் சிலர் வந்தனர். நாம் விவசாயிகளை வரவேற்று, மடத்து நிர்வாகிகளிடம், “இவர்கள்தான் சிவகங்கை மன்னர்கள். இவர்களை உபசரியுங்கள்” என்றோம். எல்லோர் முகத்திலும் வியப்பு: ஆம்! நாட்டின் மன்னர்கள் விவசாயிகள்தான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமடத்தில்