பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

501



கற்றோர் அறியா அறிவும் கற்றோர்க்குத் தாம் வரம் பாகிய தலைமையும் பெற்றவர்கள். திருவண்ணாமலை ஆதீனத்தின் அருட்குரவராக விளங்கும் அரிய பேறு, உடைவர்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் அருளுரையைத் தம் வாழ்வின் உயிர்ப்பாகக் கொண்டு இலங்கும் உயர் பேரருளாளர் ஆவர்.

திருவருள் உள்நின்று உணர்த்த எழுந்த சிந்தனைகள் ஆதலின் இந்நூல் 'திருவருட்சிந்தனை' என்னும் பெயருடன், வெளிவருகின்றது. நாளும் இச்சிந்தனைகளை உளம் கொள்ளவும் அதற்குத்தக நிற்கவும் திருவருள் முன்னின்று அருளுமாக,

இச்சீரிய நூலை வெளியிடும் அன்பர் பாராட்டுக்குரிய கவிஞர் திரு.சீனி.திருநாவுக்கரசு அவர்கள் ஆவர்.

அடக்கம் மிகுந்த நல்ல எண்ணத்தோடு இத்தகைய பணியை மேற்கொண்டு செய்து உதவும் அருமை அன்பர் கவிஞர் சீனி. திருநாவுக்கரசு அவர்களுக்கு தமிழுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.

மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

திருப்பனந்தாள். கு. சுந்தரமூர்த்தி


14. தமிழமுது


1988 டிசம்பர்

மதிப்புரை


டி. வி. வெங்கட்டராமன், I.A.S.

தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. தமிழ் மொழியின் சிறப்பை அளவிட்டுக் கூற இயலாது. மிக