பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

502

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


நுண்ணிய எண்ணங்களுக்குச் சொல்லுருவும், பேச்சுருவும் தரும் ஆற்றல் படைத்த மொழியாகும். சங்கப் புலவர்கள் ' அகத்தையும் புறத்தையும் படமிட்டுக் காட்டிய பெருமை தமிழ் மொழிக்கேச் சாரும். தமிழை அவர்கள் மொழியாகக் கையாண்டதாலேயே இந்தச் சாதனையைப் புரிய முடிந்தது. அவர்களுக்குப் பின்னால் வந்த நால்வர்களைப் போன்ற ஒப்பற்ற இறையுணர்வாளர்கள் தமிழ் மொழியையும், ஆன்மீகத்தையும் வளர்த்த பாங்கினை உலகு அறியும். ஆழ்வார்களும் தங்களுடைய திருப்பாசுரங்களால் தமிழ் மொழியின் தேனினும் மிக்க இன்பத்தை உலகிற்குப் பகிர்ந்து கொடுத்தார்கள், திருக்குறளை அருளிச் செய்த திருவள்ளுவரால் தமிழ் மொழி உயர்ந்தது. தமிழ் மக்கள் உயர்ந்தனர், கம்பன் தமிழ் மொழியைக் கொண்டே பாமர மக்களும் கவிதை நயம், இறையுணர்வு, ஆன்மீகப்பற்று ஆகியவற்றின் உச்சிக்கிளையை அடையச் செய்தான். தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம், முடிவில்லை.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சற்றேறக்குறைய நூற்று ஐம்பதே பக்கங்களில் தமிழ் மொழியின் பெருமையைத் தெளிவாக்கியுள்ளார். அதை அவராலேயேதான் சாதிக்க இயலும். அவர் கையாண்ட முறைகள் போற்றத்தக்கவை. தமிழ் மொழி தமிழர் வாழ்வுடன் ஒன்றிச் செல்வதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். தமிழனுக்கு என்று இருந்த பண்பாடும், நாகரிகமும், நெறியும் இன்று தமிழ் இலக்கியக் குவியலில் நிரம்பிக் கிடக்கின்றன, ஒரு காலத்தில் அந்தப் பண்பாடும், நாகரிகமும், நெறியும் தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வில் பின்னிக் கிடந்தன, இன்று அவை களுக்கு ஏட்டளவிலே, பேச்சளவிலே, மட்டும் போற்றுதல் நடந்து வருகின்றது. இதை நமக்கு எடுத்துக் காட்டி தமிழ்