பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

505


வெளிப்பூச்சு; வெற்று ஆரவாரம். இக்கருத்துக்களைத் தமக்கே உரிய பாணியில் அடிகளார் கூறுவதை “பாரதியின் சமுதாயம்", "பாரதியின் சக்தி வழிபாடு" என்ற தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளில் காண்கிறோம். "பொருளாதார சமத்துவம் இல்லாத நாட்டில் அறம் வளராது; அன்பு வளராது. பாரதியின் 'எல்லாரும் ஓர் விலை' என்ற இலட்சியம் நிறைவேறினால்தான் இந்திய விடுதலை முழுமை பெறும்,” என்று அடிகளார் கூறுவது, அரசியல்வாதிகளுக்கு அவர்கள் செய்யும் எச்சரிக்கையாகும். "பாரதியின் கவிதைப் பயணம் நாட்டு வரலாற்றில் நடக்க வேண்டிய பயணம்; நடந்து விட்ட பயணம் அல்ல" என்று அடிகளார் கூறுவது சமுதாயத்தில் நாம் செயலாற்ற வேண்டிய தேவையையும் திக்கையும் காட்டுகிறது.

வெறும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு, அறிவை அடகு வைத்து தனிமனித வழிபாட்டு எல்லை மீறி விரும்பித் தாழ்ந்து கிடக்கும் தமிழர்களுக்கு இத்தகைய அறிவுபூர்வமான கருத்துக்கள், ஆக்கத்தை அளித்து அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்யும்.

இத்தகைய சிறந்த கருத்துக்கள் அடங்கிய தவத்திரு குன்றக்குடி அடிகளாருடைய நூலின் பதிப்பாளர் கலை வாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி, திருநாவுக்சுரசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனிய, பண்புகளும், எளிய வாழ்க்கையும் அன்பும் அறதோக்கும் கொண்ட திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இத்தகைய முற்போக்குக் கருத்துகள் கொண்ட மேலும் பல நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளிப்பாராக.

U-1, இலாயிட்சு குடியிருப்பு,

வி. செ. கந்தசாமி,

இலாயிட்சு சாலை,

தலைவர்,

சென்னை -14.

சென்னை மாவட்டத்
திருக்குறள் பேரவை.