பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


நாவுக்கரசு அவர்கள் அடிகள் பெருந்தகையின் நூல்கள் பலவற்றைக் கலையழகு மிளிர வெளியிட்டு வருபவர். அவர்தம் தூயதொண்டு வாழ்ந்து வளம் சிறப்பதாகும்.

வை. இரத்தினசபாபதி


அணிந்துரை
(அப்பர் விருந்து)


கவிஞர் வீ.செ. கந்தசாமி, I.R.S.,
தலைவர், சென்னை மாவட்டத் திருக்குறள் பேரவை.

'மக்களுக்கே எல்லாம்' என்பதே போல், 'சமுதாயத்திற்கே நாம்' என்ற சீரிய கொள்கையின் அடிப்படையில் நற்பணிகளாற்றி வரும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அப்பர் விருந்து நம் சிந்தனையைத் துரண்டும் மற்றுமோர் படைப்பாகும்.

சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகுதியுடைய பெரியார் அப்பரடிகள் (பக். 10) என்பதைப் பல்வேறு காரணங்களைக் காட்டி இந்நூலில் நிறுவியிருக்கிறார்கள். "அப்பரடிகள் புரட்சிக்காரர்; புதிய புரட்சியை உண்டாக்கினார்" (பக். 12) என்று கூறும் அடிகளார். சமுதாய அரசியல் சீர்திருத்தங் களுக்கு அப்பரடிகள் வகுத்த வழிகளும், கடைப்பிடித்த முறை களும் இன்றும், ஏன், என்றும் எப்படிப் பொருத்தமுடையன என்ற விளக்கத்தை அளிக்கிறார்கள். அந்த நோக்கில், யுகசந்திப்புகளும் இந்நூலில் நிகழ்கின்றன. அப்பர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டையும், புதுமை நிறைந்த, அறிவு பெருகிய மறுமலர்ச்சியும் சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டாகக் கருதப்படும் இருபதாம் நூற்றாண்டையும் தம் நூலில் அடிகளார் சந்திக்க வைக்கிறார்கள். இது அடிகளார் அவர்களுக்கே அமைந்த தனித் திறமை; அரிய கலை.

மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி இம் மண்ணுலகிலிருந்து அழியாது என்ற, சென்ற நூற்றாண்டில்