பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

509


வாழ்ந்த ஆபிரகாம் லிங்கனின் கருத்துக்கள் ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் வாக்கில் "எமக்காக ஆட்சியேயன்றி, ஆட்சிக்காக நாமல்ல” என்ற விடுதலை முழக்கத்தை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது.

சமுதாயத்திற்கே எல்லாம் சொந்தம் என்ற கொள்கையில் உறுதியுடைய அடிகளார் அவர்கள், கோயில்களும் சமுதாய உடைமையாக வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். எப்படி? கோயில்களை மக்கள் கட்ட வேண்டும் இருக்கும், “ஆட்சியில், சமுதாயச் சீரமைப்பு பணிகளில் மக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொதுமைச் சமுதாயத்திற்கு வழிகோல இதுவே அடிப்படை. இவை எல்லாவற்றிற்கும் மணிமுடியாக, “மனிதனைச் சமுதாய மனிதனாக்க வேண்டும்” (பக். 34) என்பது அடிகளார் அவர்களின் பெரு விருப்பம். 'என்னுடையது' 'நம்முடையது' ஆனபிறகே வாழ்க்கை புகழுடையதாக, சிறப்புடையதாக அமைகிறது. (பக். 115) என்ற கருத்திலும் பொதுமை நலம் இழையோடக் காண்கிறோம்.

உலகத்தின் முதல் பொதுவுடைமைத் தலைவன் இறைவனே (பக், 108), அந்த இறைவனில் மனிதன் ஒன்ற வேண்டும் (பக். 110), அறிவியல் சார்ந்த வழிபாட்டினால் இது இயலும் என்று விளக்கிக் கூறும் இந்நூல் இன்றைய சமுதாயத்திற்கு மிக மிகத் தேவை. இந்நூல் காலத்தை வென்று நிற்கும். தமிழ்நாட்டின், சிந்தனைச் சுரங்கமாக விளங்கும் தவத்திரு அடிகளாருக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஆன்றமைந்த சான்றோராகிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூல்களை வெளியிடுவதில் பெருமை கொள்ளும் . இனிய பண்புகளும் எளிய வாழ்க்கையும், அறநோக்கும் கொண்ட "திருக்குறள் நெறித்தோன்றல்" திருமிகு சீனி திருநாவுக்கரசு அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி பாராட்டுகிறது.

வீ. செ. கந்தசாமி, I.R.S.