பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

510

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



நானென் சொல்வேன்?

(அப்பர் விருந்து)


"அமுதமழை பொழிகின்ற முகிலோ? தென்றல்
அழகுநடை பயிலவரும் பொதிகை ஊற்றோ?
கமழுமண மலரறியா நறையோ? இன்பக்
காவிரியோ? கவிமுழக்கப் பறையோ? நெஞ்சக்
குமுதமலர் திறக்குமொளி நிலவோ?’ என்று
குளிர்தமிழின் உரைகேட்போர் வியக்கப் பேசும்
நமது தவத் திருஅடிகள் உரையின் மாண்பை
நவிலுதற்கு வல்லவரார்? நானென் சொல்வேன்?

புலவர் புலமைப்பித்தன்


16. சைவ சித்தாந்தமும்

சமுதாய மேம்பாடும்


1990 செப்டம்பர்

அணிந்துரை

டி. வி. வெங்கட்டராமன், I.A.S.


தவத்திரு குன்றக்குடி அடிகளாரைத் தமிழகத்தில் தெரிந்து கொள்ளாதவர்கள் இருக்க முடியாது. நீண்ட கால மாகத் தமிழுக்கும், சைவத்திற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், ஏழைமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிகள் ஆற்றி வரும் தொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. சமயப் பணிகளில் மட்டும் தனது பங்கினை நிறுத்திக் கொள்ளாது, நலிவுற்ற சமுதாயம் வாழ்க்கையில் வளம் பெற்று, முன்னேற்ற நீரோட்டத்தில் முழுமையாகச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற சீரிய நோக்கம் கொண்டவர் அடிகளாவார். சிறந்த சொற்பொழிவாளர். பல ஆழ்ந்த கருத்துக்களை மிகத்