பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

511


தெளிவான வகையில் விளக்கி மக்கள் மனத்தைக் கவரக் கூடிய ஆற்றல் படைத்தவர். சிறந்த அறிஞர், சமயக் கோட் பாடுகளை நன்கு உணர்ந்து கொள்வதோடு மட்டும் நிற்காமல் அவற்றைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டு சிறந்த பண்புகளைப் பெற்றவராகிக் காண்போரையும், கேட்போரையும் அந்தப் பண்புகளால் ஈர்க்கும் வல்லமை பெற்றவர்கள்.

அத்தகைய பெரியார் பல ஆண்டுகளாகச் சைவத்தின் பால் ஆற்றிய சொற்பொழிவுகள், எனது அருமை நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களுடைய சீரிய முயற்சியால் அழகான நூலாக வெளிவருகின்றன.

சைவத்திற்கப்பால், சமயம் வேறொன்றில்லை, சைவ சமயமே சமயம் என்று ஆங்காங்குச் சான்றோர்கள் ஒலியை எழுப்பி வந்தாலும், மக்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்குச் சைவ சமயத்தின் கருத்துகள் நூல்கள் மூலமாகப் பரப்பப்படவில்லை என்பதே அடியேனுடைய கருத்தாகும். சைவத்தின் சிறந்த உண்மைகளை ஆழ்ந்து உணர்ந்த பெரியோர்கள் நம்மிடையே பலர் இருக் கின்றார்கள். நாள்தோறும் பல இடங்களில் சைவ சமயச் சொற்பொழிவுகள் நடந்து கொண்டுதான் வருகின்றன, எனினும், இத்தகைய நிகழ்ச்சிகளில் சிலரே பங்கேற்கின்றனர், குறிப்பாக, இளைய சமுதாயத்தினரை இந்த நிகழ்ச்சிகளில் காண்பது அரிதாகிவிட்டது. இதற்குக் காரணம், நுட்பமான கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்துப் படித்தவர்கள் அவற்றின்பால் நாட்டம் செலுத்தும் வகையில் நம்மிடையே நூல்கள் தேவையான அளவிற்கு வெளி வரவில்லை.

இந்தக் குறையை ஒரு வகையில் அடிகளாருடைய இந்த நூல் நிறைவு செய்கின்றது என்று சொல்லலாம். சைவ சித்தாந்த வரலாறு மிக விரிவாகவும், தெளிவாகவும் உள்ளத்தில் பதியும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த கருத்துகள் உண்மையில் தெரிந்து கொள்வதற்கு ,