பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

513


அவருடைய முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவபெருமானை நான் வேண்டிக் கொள்கிறேன்.

டி. வி. வெங்கட்டராமன்

சென்னை
23-8-90

மதிப்புரை
(சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்)
சி. அருணைவடிவேல் முதலியார்
"சைவத்தின் மேல், சமயம் வேறிலை;
அதில் சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்”
-சைவ எல்லப்ப நாவலர்.

என்பதும்

"சைவ சமயமே சமயம்;
சமயா தீதப் பரம் பொருளைக்
கைவந் திடவே மன்றுள் வெளி
காட்டும்; இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந் துழலும் சமயநெறி
புகுத வேண்டா"
-தாயுமானவர்

என்பதும் சைவப் பெரியோர் வாக்குகள். இவற்றை இக்காலத்தில் நடுவு நின்று ஆராயும் ஆராய்ச்சியாளரும் 'உண்மையென' உடன்படுகின்றனர். இந்திய நாட்டு வரலாறு கூறுவோரும், இந்நாட்டின் பண்டைச் சமயம் சைவமே என் கின்றனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த இச்சமயத்தின் தத்துவமே 'சைவ சித்தாந்தம்'-என்பது பலரும் அறிந்தது.

தமிழ்நாட்டின் தொன்மைச் சமய தத்துவமாகிய சைவ சித்தாந்தம், சென்ற 7 அல்லது 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு