பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

521



அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றுபட இறையருள் கூட்டுவிக்குமாக!

நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி, பதிப்பகத் தாருக்கு என் பாராட்டு.

ம. பொ. சிவஞானம்

சென்னை-18
28-12-92


20. சிந்தனைச் சோலை


1992-டிசம்பர்

கலைமாமணி-தமிழ் மறைக் காவலர்
திருக்குறளார், வீ. முனிசாமி


பாராட்டுரை

ஆன்மிகம், சமுதாயம், இலக்கியம், அரசியல் இன்ன பிற துறைகளிலெல்லாம் புரட்சிகரமான நல்ல அறிவியல் கருத்துக்களைத் தமிழகத்தில் பரப்பி வருகின்ற தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டி "சிந்தனைச் சேர்லை" என்ற பெயரில் நமது நண்பர் சீனி. திருநாவுக்கரசு அவர்கள் கொண்டு வந்திருப்பது மிக மிக அரிய பணியாகும்.

அன்றும், இன்றும், என்றும் எங்களுடைய போற்றுதலுக்கும் வழிபாட்டிற்கும் உரிய தமிழ் மாமுனிவர் தவத்திரு