பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

525



"தெய்வம் உண்டுகொல்” என்ற கண்ணகியின் கூற்றில் "தெய்வம்” என்பதற்கு என்ன பொருள் என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார் அடிகளார், தெய்வம் என்பது நியதிகளின் மறுபெயர். நீதியின் வடிவம் தெய்வம்.

எங்கு நீதி போற்றப்படுகிறதோ அந்த நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப்பெறும், இயற்கை நியதிகள் பாராட்டப் பெறும். வல்லாண்மை வாழும். தெய்வத்தை "நீதி’ என்று திருவாசகம் போற்றுகிறது என்று அடிகளார் முடிக்கிறார். இந்த நூலில் என் உள்ளத்தையும் உணர்வுகளையும் தீண்டிய பகுதி இதுதான்.

பலமுறை படித்து மகிழ்ந்தேன். வாசகர்கள் இந்நூலின் எல்லாபகுதிகளையும் படித்து மகிழ்ந்து இன்புற வேண்டும். இதுவே என் அவாவும் வேண்டுகோளும் ஆகும்.

தவத்திரு அடிகளார் அவர்களின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் திரு.சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இதனையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.


சென்னை தங்கள்
25-9-93 பி.வேணுகோபால்


22. சமுதாய மறுமலர்ச்சி


1993 டிசம்பர்

அணிந்துரை


கலைமாமணி, தமிழ்மறைக் காவலர்,
திருக்குறளார், வீ. முனிசாமி.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் வானொலியில் ஆற்றிய இலக்கியப் பேருரைகளே "சமுதாய