பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடித்துப் பிடித்து யோசித்த பிறகுதான் புரிந்தது. இவன் விதை போடவே இல்லை!

சுண்டலும் சுரண்டலும்

புரட்டாசி சனிக்கிழமை. பஜனை மடத்தில் கூட்டம் மிகுதி.}} ஆனால் பஜனை முடிந்தவுடன் கொடுப்பதற்குரிய சுண்டல் மிகவும் குறைவாக இருந்தது. நிர்வாகிகள் சுண்டலைச் சீராக விநியோகம் செய்து வந்தனர். ஆயினும் பின்வரிசையில் இருந்த ஒருவருக்குத் திடீரென்று ஐயம் ஏற்பட்டுவிட்டது. சுண்டல் நாம் இருக்கும் இடம்வரை வருமா? உடனே எழுந்தார். முண்டியடித்துப் பலரையும் நெருக்கிக்கொண்டு சுண்டல் சட்டியை நோக்கி ஓடினார். தமது இரண்டு கைகளாலும் சுண்டலை அள்ளிக் கொண்டு ஓட முயன்றார். அங்கிருந்த பலர் அவரைப் பிடித்து, பத்துப் பேருக்கான சுண்டலை அவர் அள்ளிக்கொண்டு ஒடுவதைக் கண்டித்துச் சுண்டலைத் திரும்ப வாங்கிவிட்டனர். இந்தப் பஜனை மடத்தில் புரியும் நியாயம் கூட நாட்டு வாழ்க்கையில் யாருக்கும் தெரிவதில்லையே!

ஐந்தாண்டுத் திட்டங்களால் விவசாயம் செழித்தது. தொழிற்புரட்சி ஏற்பட்டது. நாட்டின் வருவாய் உயர்ந்தது. ஆனால் பல தனி நபர்களின் வருவாய் உயரவில்லையே. ஏன்? பலருடைய பங்கு சிலரிடம் போவதால்தானே! வாழ முடியும் என்ற நம்பிக்கை வழங்கப்படாவிட்டால் சமூகக் குற்றங்களை எப்படிக் குறைக்க இயலும்?

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?

ரு சமயம் செஞ்சிக்குப் போய்விட்டுப் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். பஸ்ஸின் ஜன்னல் வழியே அகஸ்மாத்