பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

43


தாய்ப் பார்த்துக் கொண்டு வந்தபோது, ஓர் எல்லைக் குடியிருப்பில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லோரும் உதவிக்கு விரைந்தோம். மேற்குப் பகுதிக் குடியிருப்பில்தான் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. எங்களால் கிழக்குப் பகுதி வழியாகத்தான் அங்கு துழைய முடிந்தது. நுழைந்தால், பெரிய அதிர்ச்சி. கிழக்குப் பகுதி ஆட்கள், எரியாமல் நன்றாய் இருந்த தங்களின் வீடுகளின் கூரையில் அவசரம், அவசரமாய்த் தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொண்டிருந்தனர். "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று, விசாரித்தேன். அதற்கு அவர்கள் "அந்தத் தீ எங்கள் பகுதிக்கும் பரவிவிட்டால் எங்கள் வீடுகள் தீப்பற்றிக் கொள்ளுமே! அதற்காகத்தான் இப்படிச் செய்கிறோம்," என்றார்கள். "அடக் கடவுளே! இங்கே கொட்டும் தண்ணிரை அங்கே போய்க் கொட்டினால் அவர்கள் வீடும் பிழைக்கும். உங்கள் வீடும் பிழைக்கும், இடையில் உள்ள வீடுகளும் பிழைக்கும் அல்லவா?" என்று கேட்டேன். இன்று பலர் இப்படித்தான் செய்கிறார்கள். தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்வதில் குறியாய் இருக்கிறார்கள், அடுத்த வர்களைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறை இல்லாமல்!

என் வயது 171/2

நான் பதினேழரை வயதிலேயே ஆசிரமம் வாங்கி விட்டேன்.

அந்தச் சமயத்தில் என் சொத்துக்களைச் சரியான முறையில் என் பெற்றோருக்கு உதவுகிற மாதிரி ஏதாவது செய்துவிட்டு வர வேண்டும் என்று என் மனதுக்குள் ஒர் எண்ணம் இருந்தது.

அது விஷயமாய் என் அண்ணன் தம்பிகளை அழைத்துக் கேட்டேன்.