பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

544

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


இருபதாம் நூற்றாண்டின் அப்பர் அடிகளாக அவனிக்கு நம் அருள்நெறித் தந்தையை அறியச் செய்தது!

"சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேன்"

என்பார் மாணிக்கவாசகப் பெருமான்.

"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?"

என்பார் அப்பரடிகள். சாதீய உணர்வுகளுக்கு இடம் அளிக்காத தமிழர் சமயம் எப்பொழுது தடம் மாறியது? நாத்திகம் நஞ்சு; அதே பொழுது கடவுள் நம்பிக்கை மனிதநேயத்திற்கு மாறாக இருப்பின் அது நாத்திகத்திலும் கொடிது! கடவுள் நம்பிக்கையை வலியுறுத்திய மதப் புரோகிதர் சுரண்டும் கூட்டத்தோடு சேர்ந்தபின் செல்வச் செழிப்பு கடவுள் கருணை-புண்ணியத்தின் பயன் என்று கூறியவுடன் சுரண்டப்பட்ட வாழ்விழந்த மக்களிடையே கடவுள் மறுப்புக் கொள்கை தோன்றிற்று, சாதீய உணர்வுகளுக்கு விடை கொடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திருமடத்தின் கதவுகளை திறந்துவிட்டு வாழ்விழந்த மக்களோடு உண்டும் கலந்தும் வாழ்ந்தும் திருமடங்களின் வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த முதற் புரட்சித் துறவி நம் அருள்நெறித் தந்தை அவர்கள்தான் என்பதை இந்த வரலாறு கூறுகின்றது.

சரித்திரம் இரத்தக்கறை படிந்த அந்த நாட்களை நினைவுப்படுத்துகின்றது. 1982 மார்ச் மாதம்! மண்டைக்காடு மிகப்பெரிய மதக் கலவரத்தைச் சந்திக்கின்றது! அரசால் கூடத் தடுக்க முடியாத-அணைக்க முடியாத அந்தப் பெருந்தி, அகோரமாய் எரிந்து கன்னியாகுமரி மாவட்டத்தையே கலக்கியது, மதம் பிடித்த மனிதர்கள் விலங்குகளாய் மோதிக் கொண்டிருந்தார்கள்! உயிரைப் பணயம் வைத்து அருள்