பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

545


நெறித் தந்தையவர்கள் மேற்கொண்ட தியாகப் பயணம் பல உயிர்ப் பலியைத் தடுத்து நிறுத்தியது. ஆதவனைக் கண்ட பணிபோல் இருந்த இடம் தெரியாமல் வன்முறை தடுக்கப் பட்டது! மதவெறித் தீயை அணைத்த புனித நீர் மனிதநேய மாமுனிவரின் விழி நீர்! பூமிப்பந்தை உள்ளங்கையில் உருட்டி விளையாட ஆசைப்பட்ட மதவெறி சக்திகளுக்குச் சம்மட்டி அடி.

இஃது ஒரு நீண்ட பயணம்! சமயத்தையும் சமுதாயத் தையும் இணைத்து அழைத்துச் சென்ற இலட்சியப் பயணம்!

"கவலை துறந்திங்கு வாழ்வதே வீடு" என்று பாரதி பகர்ந்ததைப் போல, இந்தப் பூவுலகத்தைப் பொன்னுலகமாக, தேவருலகமாக ஆக்க நினைத்த தேவகுமாரரின் இலட்சியப் பயணம்!

உலகம் யாரால் இருக்கின்றது என்று நமக்கு ஓர் ஐயப்பாடு! கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியின் புறப்பாடல் இதற்கு விடை கூறுகிறது. "உலகம் நோன்பு நோற்கின்றவர்களால் இருக்கின்றது” என்பதுதான் அந்த விடை, அவர்கள் எப்படி நோன்பு நோற்பவர்கள்? உண்ணாமல், உறங்காமல் நோன்பு நோற்பவர்கள் அல்ல! தமக்கு என்று முயலாமல் பிறர்க்கு என முயலுபவர்கள் யாரோ அவர்கள் தான் நோன்பு நோற்பவர்கள்! அப்படிப்பட்ட நோன்பை மேற்கொண்ட புனிதத் துறவியின் இலட்சியப் பயணம்! கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராய், ஓடும் செம் பொன்னும் ஒக்கவே நோக்கிய வித்தகத் துறவியின் விரிந்த பயணம்.

"மண்ணும் மனிதர்களும்" என்று பெருமையுடன் அழைக்கப்பெறும் இந்த வரலாற்றுப் பயணம் பல சான்றோர்களைச் சந்தித்திருக்கின்றது. எத்தனை உறவுகள்! அப்பப்பா! மனித உறவுகளுக்காக சகலத்தையும் துறந்தவர்கள் நமது மகாசந்நிதானம் அவர்கள். ஒருமுறை