பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

546

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


வினோபாபாவே நம் திருமடத்திற்கு வந்திருக்கிறார்கள். வினோபாபாவேயின் கொள்கை மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாகத் திருமடத்தின் தலைமைப் பொறுப்பைக் கூடத் துறக்கத் துணிந்தார்கள் மகாசந்நிதானம் அவர்கள். பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் இப்படிப் பல தலைவர்கள் அந்த வரிசையில் வருகின்றனர். தந்தை பெரியாருக்கும் நமது மகாசந்நிதானம் அவர்களுக்கும் இருந்த உறவு இலட்சிய உறவு! தமிழ் மக்களின் நன்மை என்ற இலட்சிய அடிப்படையில் கொள்கை வேறுபட்ட இரண்டு இலட்சியத் துருவங்கள் இணைந்து செயல்பட்டன. அறியாமை யுடையவர்கள் அந்த நட்பின் ஆழத்தை அறியாமல் ஐயுற்றனர். மகாசந்நிதானம் அவர்களின் பயணம் "மண்ணும் மனிதர்களும்" என்று உருவாகியுள்ளது. மனித நேயத்திற் காகவே வாழ்ந்த அந்த மகாமுனிவர் மனிதர்களை எப்படி நேசித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கும் விளக்குகிறது.

இதனை நூலாக்கும் கடும் முயற்சியில் தம்மைத் தாரை வார்த்துக் கொண்டவர் அருமைக்குரிய 'கயல் தினகரன்.' அவர் குருமகாசந்நிதானத்தின் நீண்ட நெடுங்கால நண்பர். இந்த முயற்சிக்குத் தம்மைத் தந்த கயல் தினகரன் அவர்களுக்கு என்றும் நன்றிக் கடப்பாடு உடையோம்! ‘மண்ணும் மனிதர்களும்' என்ற இந்த நூல் 'ஆனந்த விகடன்' வார இதழில் தொடராக வெளிவந்தது. இந்தத் தொடரை ஆனந்தவிகடனில் வெளியிடச் செய்த ஆனந்த விகடன் 'எஸ். எஸ். வாசன் குடும்பத்தாருக்கும்' வாரந்தோறும் கட்டுரைகள் தவறாது வெளியிட அர்ப்பணித்துப் பணியாற்றிய நமது ஆதீனம் 'மரு. பரமகுரு' அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.

இமயத்தின் உச்சியில் ஏற்றப்பட்ட இலட்சிய தீபம் ஒளியை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது. அறியாமை,