பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

45


அருமையான கோயில் சூழ்நிலை. எப்போதுமே மைலாப்பூர் ரசிகர்கள் தரமான நிகழச்சியைக் கைதட்டி வரவேற்று ரசிப்பார்கள். அவர்களுக்குப் போய் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று எனக்கே கூச்சமாய் இருந்தது. நான் சொல்லி விட்டேன்- "நம் ரசிகர்கள் நத்தையைப் பொறுக்க வர வில்லை. முத்தைப் பொறுக்க வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உழைத்துப் பேசுங்கள்.” என்று. ஆக, பட்டிமன்றங்கள் பாதை மாறும்போது வழிநடத்த வேண்டியது நடுவர் கடமை.

ஒரு கேரோ

குன்றக்குடியில் ஒரு நாளிரவு ஒருவர் தன் மனைவியை மனம் போன போக்கில் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

நான் ஒரு யோசனை சொன்னேன். அதன்படி குன்றக்குடி மாதர் சங்கத்தினர் பதின்மர் சேர்ந்து, வீதியில் மனைவியை அடித்த அந்தக் கணவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேரோ செய்து, 'இனி மனைவியை அடிப்பதில்லை' என்று அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டுதான் கேரோவிலிருந்து அவரை விடுவித்தனர்.

பதிவு செய்யாதீர்கள்

ரசு என்பது வேலை வாய்ப்புத்தரும் ஒர் எந்திரம் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் இருக்கிறதே, அதை முதலில் மாற்ற வேண்டும். எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து கொண்டால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை யாருக்குமே இருக்கக்கூடாது. அரசாங்கம் தன்னுடைய எல்லையை ரொம்பவும் சுருக்கிக் கொண்டு, வேலை வாய்ப்புக்களைக் கூட்டுறவுமுறை, சமூகமே வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளும் முறை என்ற மாதிரியான திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.