பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசாங்க வேலை கிடைத்தால் மிகவும் சுலபம் என்ற மனோ நிலை மாறவேண்டும். நல்ல உழைப்பு, நல்ல திறம், இவை வளரவேண்டும். கல்வி என்பதே மாணவர்களிடம் சிந்தனைத் திறனும் செயல் திறனும் உருவாக்கும் விஷயமாக அமைய வேண்டும்.

என் சவால்! யார் தயார்?

ப்போதைய இளைஞர்கள் ஸ்போர்ட்ஸை வாழ்க்கையின் ஒர் அங்கமாய் எடுத்துக் கொள்ளாமல் ஒரு வெறியுடன் பார்க்கிறார்கள். கிரிக்கெட்டில் ஏற்பட்ட மோகத்தில் டி.வி.க்கு முன்னால் எத்தனை மணி நேரம் வீணாய்க் கழிக்கிறார்கள்! அதில் அவர்களுக்கு ஒரு ஆவேசம் வந்து விடுகிறதே? நம் இளைஞர்களுக்கு வாலிபால், ஃபுட்பால் ஆகியவற்றில்தான் நிறையப் பயிற்சி கொடுக்க வேண்டும். அதில்தான் அதிக உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

நான் நன்றாக நீச்சல் அடிப்பேன். வாலிபால் மிகவும் நன்றாய் விளையாடுவேன். இப்போதும் கூட விளையாடத் தயார்தான். என்னுடன் ஆட யார் தயாராய் இருக்கிறார்கள்? இங்கே எல்லோருக்கும் வயதாகிவிட்டது!

கணவர்களைப் பிடியுங்கள்!

பெண்கள் வேலைக்குப் போவதில் எனக்கு உடன் பாடே கிடையாது. அப்படிப் போனால், நம் நாட்டில் உள்ள சிற்றுண்டிச் சாலை, பேருண்டிச்சாலைகளின் தரம் கூட வேண்டும். நல்ல ஆரோக்யமான உணவு கிடைக்க வேண்டும். ஆர்டர் செய்தால் பத்தே நிமிடங்களில் உணவு வந்து சேரும்படி இருக்கவேண்டும்.