பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

51


துறையிலும்கூட நிறைய சாதனை செய்திருக்கிறது. அப்படியிருந்தும் இந்தியாவில் வறுமை இருப்பதற்குக் காரணம் என்ன ?

ரங்கராஜன்: வறுமை ஒழிப்புப் போராட்டத்தில் அறிவியல், தொழிற்புரட்சி ஆகியவைகளின் பங்கு முக்கிய மானாலும், முழுமையானதல்ல. சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளும் இந்தச் சவாலுக்கேற்ப வளர்ச்சி கண்டிருந்தால் வெற்றி இதைவிட இன்னும் அதிகம் இருந்திருக்கும்.

சேர்ந்து வாழுவிரோ - உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ?

சோர்ந்து வீழ்தல் போச்சோ- உங்கள் சோம்பரைத் துடைத்திரோ!

என்ற கேள்விகளுக்கு இன்னமும் விடை இல்லை.

அடிகளார்: தாங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கூறும் செய்தி என்ன?

ரங்கராஜன்: விவேகானந்தர்களாக மாறுங்கள்! "உழைத்தல் வேண்டும், அயராது அன்போடு உழைத்தல் வேண்டும். சுயநலத்தோடு உழைப்பது அடிமையின் வேலை. பிறருக்காக உழைப்பதே தலைவனின் வேலை."

பிரபலங்களுடன் ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி.

தந்தை பெரியார்:

கறுப்புக்கொடி காட்டாதீங்க

ப்போது ஜஸ்டிஸ் பார்ட்டி, நான்பிராமின் இயக்கம் என்றெல்லாம் இருந்ததால், தமிழ் இனமே பிளவுபட்டு