பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதனால் நாங்கள் ஒரு குழந்தைக்கு 150 கிராம் காய்கறி கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டு அதற்கான உற்பத்தித் திட்டமும் போட்டு நிறைவேற்றத் துவங்கியிருக் கிறோம். நாங்கள் அரசுக்கு என்ன சொல்லிக் கொள்ள விரும்புகிறோம் என்றால், தரிசு நிலங்கள் வீணாய்ப் போவதைக் காட்டிலும் விவசாயிகளை வைத்துக் காய்கறி களைப் பயிர் செய்யுங்கள். அதில் வருவதைக் குழந்தைகள் சத்துணவுக்குச் செலவிடுங்கள். அப்படிச் செய்தால் குழந்தை களும் பலன் பெறுவார்கள். தரிசு நிலங்களும் உபயோகப் படும். அப்படிச் செய்யாமல் காசாகக் கொடுக்கிறீர்களே, அந்தக் காசுக்கு அவர்கள் காய்கறிகள் வாங்குகிறார்களா என்று யார் கவனிப்பது?

எல்லோருமே ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும். நான் சுயநலமாய் என் கிராமத்தை மட்டும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. என் ஊரை மட்டுமல்லாமல், பசும்பொன் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் ஒரு சிறிய ஊரையும் எங்கள் திட்டத்தின் கீழ்கொண்டு வரவிருக். கிறோம். தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் ஊர், கீழ்ப்பழையாறை என்பது. அது மங்கையர்க்கரசி பிறந்த ஊர். ஏழாம் நூற்றாண்டில் சமண சமயத்தோடு போராடியவர் மங்கையர்க்கரசி. பாண்டியன் நெடுமாறனுடைய மனைவி.

அடுத்தபடியாய், நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்கள் பிறந்த ஊர்களுக்கும் வாழ்ந்த ஊர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது என் விருப்பம். .

அதேபோல் நந்தனார் என்னும் திருநாளைப்போவார் பிறந்த மேலாதனுர் எடுத்துச் செய்துகொண்டிருக்கிறேன்: அதுவும் தஞ்சை மாவட்டத்தில்தான் இருக்கிறது. ராமானுஜர்