பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ரா.பி. சேதுப்பிள்ளைக்குப் பால் கொண்டு போகும் போது, அவர் அடிகளாரைத் தினந்தோறும் ஒரு திருக்குறள் சொல்லச் சொல்லுவாராம். அப்படி மனப்பாடமாய்ச் சொன்னால் காலணா தருவாராம். அந்தக் காலணாவை வாங்குவதற்காகவே அடிகளார் தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பாராம். அதனாலேயே அவருக்குத் திருக்குறளில் ஆழ்ந்த பற்றும் ஆர்வமும் ஏற்பட்டது என்று அடிக்கடி சொல்லுவார்.

இலக்கிய சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நான் 23 வருடமாய் அடிகளாரின் உதவியாளன்.

நாங்கள் எப்போதெல்லாம் கூப்பிடுகிறோமோ அப்போதெல்லாம் உடனே சாமி வருவார்

செல்வராஜ் (அடிகளாரின் உதவியாளர்):

நான் இங்கு அறுபத்தைந்தாம் வருடத்திலிருந்து வேலை செய்கிறேன். அடிகளார் (சாமி) பட்டத்துக்கு வரும் போது நான் பள்ளி மாணவன். சாமி பட்டத்துக்கு வந்த போது ஏழ்மை நிலையில்தான் கிராமம் இருந்தது. அவர் வந்தபோது மடத்தில் கஞ்சித்தொட்டி ஊற்ற வேண்டிய நிலை! அதாவது, ஊர்க் குழந்தைகளுக்கெல்லாம் மதியம் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் கஞ்சி ஊற்றுவார்கள். அந்த நிலையில் இருந்த பள்ளிக்கூடத்தை எடுத்துச் சீர்திருத்தியவர் சாமிதான்.

சாமி ரஷ்யாவுக்குப் போய்வந்த பிறகு கூட்டுறவு நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தார் அப்போது 1975இல் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனது. 1977இல் கிராமத்தை மிகவும் நன்றாய் மேம்படுத்த நினைத்தார். அப்போது சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல்