பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒவ்வொன்றையும் எவ்வாறு முன்னேற்றலாம் என்று ஆராய ஆரம்பித்தார்கள். திட்டக்குழு என்ற ஒன்றை அமைத்தார்கள். சிக்ரியின் விஞ்ஞானிகள், வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், கிராமவாசிகள் ஆகியோர் அதில் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் இந்தக் கிராமத்துக்கு என்னென்ன தொழில்கள் பொருத்தமாய் இருக்கும் என்று ஆய்வு செய்து சொல்லுவார்கள். சூழ்நிலையும் கெடாமல் குறிப்பிட்ட அளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கிற மாதிரியும் ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கண்ணோட்டம் வரும் வகையிலும் சொல்வார்கள். ஏற்கனவே இருந்த கதர் கிராமத்தொழில் போன்றவற்றில் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் ஆய்வுகள் செய்வார்கள்.

அடிகளாரால் எங்கள் கிராமத்துக்கு ஏகப்பட்ட நன்மைகள். எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்புக்கள். டி.வி. அசெம்பிள் செய்யும் யூனிட் போட்டிருக்கிறோம். எலக்டிரானிக் கருவிகள் டிரெயினிங் சென்டர் போட்டிருக் கிறோம். எங்கள் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பாட்டரித் தொழிற்சாலை நிறுவியிருக்கிறோம்.

நாங்கள் தினசரி மாலை வேலைகளிலோ, சனி ஞாயிறுகளிலோ ஒரு மீட்டிங் போடுவோம். ஆரம்பித்த தொழில்கள் எப்படி நடக்கின்றன என்று அதில் அலசி ஆராய்வோம். பொதுவாக, நிர்வாகச் சிக்கல்கள் நிறைய வரும். மூலப்பொருட்கள் கிடைக்காமல் போகலாம். குறிப்பிட்ட நேரத்தில் லைசன்ஸ் கிடைக்காமல் போகலாம். அல்லது மூலப்பொருள்களுக்குப் பணம் கிடைக்காது. சில நேரங்களில் தேவையான அனுமதி கிடைக்காது. அதுபோன்ற சமயங்களில் சாமிதான் தலையிட்டுத் தீர்த்து வைப்பார். கலெக்டரிடம் பேசியோ அல்லது தேவைப்பட்ட பெரிய அதிகாரிகளிடம் பேசியோ நமக்குச் சாதகமாக முடித்துக் கொடுப்பார். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் அது எங்கள் சம்பந்தப்பட்டதாய் இருந்தால் உடனடியாகத்