பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

69


பார்த்த பணி வாசகசாலைப் பணிதான். ஒவ்வொருவரும் 20 இதழ்கள் படித்து வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொள்ள முடிந்தது. நூலகத்துக்கு நிறைய இளைஞர்கள் வரவும் தலைப்பட்டனர்.

இந்த நூலகத்துக்கு நிறைய ஆதரவு கொடுத்தவர்களில் முக்கியமானவர் இன்று வடலூரில் வாழும் கைவல்யம் என்பவர். அவர்தம் அன்றையப் பெயர் சண்முகம் செட்டியார். அன்று நாங்கள் பலர் சுதந்திரமாக இலவசமாகக் கல்வி கற்க முடிந்தது! நாங்கள் படித்த உயர் நிலைப் பள்ளியில் இலவசக் கல்வி, தீ.சொ. நாகப்பச் செட்டியார் அறம். கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். சாதிகளுக்கு அப்பாற்பட்ட கல்வி வழங்க வேண்டும். கல்விதரமான கல்வி இலவசமாக எல்லோருக்கும் வழங்க வேண்டும். சுதந்திரமாகக் கல்வி கற்க வாய்ப்பில்லாத நாட்டில் சுதந்திரம் பரிணமிக்காது. அரசியல், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்காது. சுதந்திரத்தின் பயன் இலவசமாக, சுதந்திரமாகக் கல்வி வழங்கலிலேயே இருக்கிறது. நமது நாட்டுக்குக் கல்விச் சுதந்திரம் தேவை!

2

டி விளையாடும் பருவம், திருவேட்களத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நாலு, ஐந்து வகுப்புகள் பயின்ற காலம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள அண்ணாமலை நகருக்கு அருகிலுள்ள சிற்றூர் திருவேட்களம்! திருஞானசம்பந்த சுவாமிகளின் பாடல் பெற்ற திருத்தலம், திருஞானசம்பந்த சுவாமிகள் பல ஆண்டுகள் தங்கியிருந்த திருத்தலமும் ஆகும். இங்கு செட்டி நாட்டரசர் முயற்சியினால் பல்கலைக் கழகம் தோன்றி வளர்ந்தது. நாம் தொடக்கப் பள்ளியில் பயின்ற காலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில்