பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

73


வருவதாகக் கேட்டோம். அடிகள் நேரடியாக நம்மிடம் மறுக்கவில்லை. நம் அண்ணனிடம்... “சின்னப் பையன், அங்கு தனியே இருப்பது முடியாது. பின்னர் பார்க்கலாம்...” என்று கூறிவிட்டு, நாம் இரவில் தூங்கும்போது போய் விட்டார்கள். காலையில் எழுந்தால் அடிகளைக் காணவில்லை. ஒரே அழுகை....! பல ஆண்டுகள் கழித்து நாம் இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது அடிகளின் சமாதிக்குச் சென்று மலர் அஞ்சலி செய்து புத்துயிர்ப்புப் பெற்றோம்.

அன்று அருட்டிரு விபுலானந்த அடிகள் எடுத்துத் தந்த தீண்டாமை விலக்குக் கொள்கை இன்றளவும் நமது வாழ்க்கையின் குறிக்கோளாக விளங்குகின்றது. தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு பெரிய தீமை; என்புருக்கி நோய். இதனை நமது சமூகம் உணர்ந்தாக வேண்டும். அதேபோழ்து அண்மைக்காலமாக ஆதி திராவிடர்கள் மற்ற சமூகத்தினருடன் கலந்து மேவி மேலே வருவதற்குப் பதிலாகத் தனியே சாதிவழி அமைப்பாகவே இயங்க விரும்பு கிறார்கள். இது விரும்பத்தக்கதல்ல... மானிட சமுத்திரம் ஒப்பற்ற பாரத சமுதாயமாக-ஒரே சாதியாக விளங்க வேண்டும். இந்த லட்சியக் கனலை மூட்டி வளர்த்த அருட்டிரு விபுலானந்த அடிகளின் நாமம் வாழ்க!.


3

ஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் வைத்தீஸ்வரன் கோயில் திருப்பனந்தாள் சாலையில் உள்ளது நடுத்திட்டு என்ற சிற்றூர், இந்தச் சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிராமத்தையும் சாலையையும் இணைப்பது ஒரு வண்டிப் பாதை. ஊரின் நுழைவாயிலில் ஒரு குளம். அந்த ஊருக்கே ஒரே குளம்தான்! குளத்தங் கரையில் ஒரு பிள்ளையார் கோயில்; ஊர், ஒரே தெருதான்!

கு XVI.6.