பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

77


மணி அடிப்பது வேலை! பூஜைக்கு அரிசி, விளக்குக்கு எண்ணெய் வீடுகள் தோறும் முறை வைத்து வாங்கினோம்! முதலில் சில நாட்கள் பூஜைக்கு நாங்கள் மட்டும்தான் வந்து கொண்டிருந்தோம்! ஆனால் நாயை அகற்றிய மறுநாளே குளத்துக்கு ஊரார் வர ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் பஜனை கோஷ்டி வேறு நடத்தினோம்! அந்தக் காலத்தில் எங்களுக்கு அதிகமாகப் பாட்டுகள் தெரியாது “ராம்! ராம்!” இதுதான் பஜனை! பஜனைக் கோஷ்டியில் நமக்கு அனுமான் வேடம்! அனுமான் வேடத்தில் ராமபஜனை செய்த அந்த நாட்கள் நமக்கு இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. மெள்ள மெள்ள திருக்கோயிலுக்குக் கூட்டம் வரத் தொடங்கியது! அனுமான் உண்டியலில் கிடைத்த பணத்தில் திருக்கோயிலுக்கு மூங்கில் தட்டியில் கதவு அமைத்தோம். எங்களுடைய பூஜை, திருக்கோயில் தர்மகர்த்தா அவர்களுக்கு இரக்கச் சிந்தனையை உண்டாக்கிவிட்டது! திருப்பணி செய்து குடமுழுக்குச் செய்தார்! குடமுழுக்கு நடந்தவுடன் பிள்ளையாரைத் தொடும் உரிமையைப் பறித்து விட்டனர். ஒரு பூசகர் நியமிக்கப்பட்டார். எங்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான்.

இருப்பினும், இந்தச் சம்பவத்திலிருந்து மெள்ள மெள்ள நாங்கள் பக்தியில் வளர்ந்தோம்! பல ஆண்டுகள் முறையாக வெளியூரில் இருந்தாலும் பஜனை நடத்தி வந்தோம்! அந்தப் பூஜையும் பஜனையும்தான் நமது சமயம் சார்ந்த வாழ்க்கைக்கு வித்திட்டன. அன்று ஏற்பட்ட பொதுநல உணர்வு இன்னமும் அணையவில்லை!


4

"னக்குச் 'சூடு இருக்கிறதா....சுரணை இருக்கிறதா என்ன வாய்க்கொழுப்பு”

“எனக்குச் சூடு இருக்கிறதா ....சுரணை இருக்கிறதா என்றா கேட்கிறாய்?”