பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இப்படி அடிக்கடி சண்டை போடுவதைப் பார்த்திருக் கிறோம். கேட்டிருக்கிறோம். ஆனால், இதுபோன்ற ஓர் உரையாடல் வித்தியாசமான இடத்தில், வித்தியாசமான மனிதர்களிடையில் நடந்தது என்பதுதான் கவனத்துக்குரியது.

திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு சமய மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள அருள்திரு பேரூர் அடிகள் (பேரூர் ஆதீனத் தலைவர்), அருள்திரு சுந்தர சுவாமிகள் (சிரவை ஆதீனத் தலைவர்), குன்னூர் அருள் திரு சற்குரு ராமலிங்க அடிகள் ஆகியோரும் நாமும் பயண மாளிகையில் தங்கியிருக்கிறோம். மாநாட்டு வரவேற்புக் குழுவினர், எல்லோருக்கும் அருந்துவதற்குப் பால் கொடுக்கிறார்கள், சற்குரு ராமலிங்க அடிகள் பால் குவளையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலையில், நாம் “சூடு இருக் கிறதா” என்று கேட்டோம்.

குன்னூர் அடிகள், “சூடு இருக்கிறது; பரவாயில்லை ...” என்றார். மீண்டும் நாம் "சூடு இருக்கிறதா?" என்று கேட்டோம். பேரூர் அடிகள் புரிந்துகொண்டு விட்டார்! "நமக்குச் சூடு இருக்கிறதா என்று கேட்கிறார்கள்...” என்றார் சுந்தர சுவாமிகள், "கேட்பது புரியவில்லையா?” என்று கேட்டார்.

அன்றைய மாநாட்டில் முக்கியமாக உணர்வுகளைப் பற்றிய விவாதம் சூடாக அமைந்தது. புதிய நோக்கம் பிறந்தது. பாரத பூமி புண்ணிய பூமி; ரிஷிகளும், ஞானிகளும் அவதரித்த பூமி. ஏன்....கடவுளரே திரு அவதாரங்கள் செய்த நாடு. ஆயினும், ஏன் உலகிலேயே மிகவும் பின் தங்கிய நாடாக அல்லது வளரும் நாடாக இருந்து வருகிறது? ஏன் இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வறுமை வளர்ந்து வருகிறது?

நமது நாட்டின் முப்பது கோடி மக்களுக்குமேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். எழுபத்து மூன்று