பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். உதவிகளும் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலும் அவருடைய பயணம் அமைந்திருந்தது. ஒரு நாள் பகல் பதினொரு மணிக்கு ஒரு ஜீப் வருகிறது. அதில் முன் வீட்டில் தலைவர்-தமிழ்நாட்டின் முதல்வர் காமராஜர்! பின் ஒரு கார் வருகிறது! மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கிக் கொண்டிருக் கிறோம்! ஜீப் நின்றது. எதிர்பாராத விதமாகத் தலைவர் இறங்கி வருகிறார். வரிசையில் நின்ற மக்களிடம் பேசுகிறார். பின் நம்மைப் பார்த்து "நிவாரண வேலை செய்கிறீர்களா?” என்றார். வியப்பின் காரணமாக நம் தரப்பில் மௌனம். காமராஜர் “இன்று ஒரு நாள் தான்! ராமநாதபுர மாவட்டப் பயணத்தை முடிக்க வேண்டும் போய் வருகிறேன்'. கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் போய்விட்டார். என்ன எளிமை! இத்தகைய எளிமையை இனி என்று காண இயலும்? அவர் சென்று பல மணி நேரங்கழித்து ஒரு டாக்ஸியில் போலீசார் வந்தனர்--போயினர்!

காங்கிரஸ் கட்சி நல்ல அடிப்படையான கொள்கை உடையது! உண்மையிலேயே ஒரு தேசியக் கட்சி! ஆயினும் குழு மனப்பான்மை காங்கிரஸை உள்ளீடழித்துக் கொண் டிருக்கிறது. இந்தக் குழு மனப்பான்மையிலும் நமக்கு அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டது உண்டு. இன்று ராஜ்யசபை உறுப்பிரனராக இருக்கும் செ. மாதவன் நமது திருமடத்தின் வழக்கறிஞராகப் பணி செய்தவர். அவருடைய தகுதி, திறமை ஆகியவற்றில் நமக்கு ஈடுபாடு உண்டு, நல்ல உறவும் உண்டு. காங்கிரஸில் உள்ள நம்மைப் பிடிக்காதவர்கள் சிலர் நம்மைப் பற்றி "காங்கிரஸில் பற்றில்லாதவர் தி.மு.க. அனுதாபி" என்று கூறி வந்தனர். இந்த நிலையிலே தேனாட்சியம்மன் கோயில்புதூரில் ஒரு பள்ளிக் கூடத்தைக் காமராஜர் திறந்து வைத்து விட்டுப் பேசும்போது இதுபற்றிக் குறிப்பிட்டார். "அடிகளார் காங்கிரஸ்காரர் அல்ல தி.மு.க.