பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

113


கின்றன? என்று ஆராய்ந்தால் வெட்கஉண்டாக்கியிருக்ப்பட வேண்டியிருக்கிறது. இந்த உணர்வுகளின் வெளியீடுகள் செயற்படாததோடு மட்டுமின்றி, இந்த உணர்வு வெளியீடுகளை-தமக்கே உரியனவாக-தம்முடைய வர்க்கத்திற்கே உரிமையுடையன வென்று பாடியும் பரப்பியும் வர முயலுகின்றவர்களைப் பார்த்தால் நமக்கு வேதனை ஏற்படுகின்றது! இந்த மனிதாபிமான உணர்வுகளைச் சராசரி அளவு கூடப் பெறாத ஏகபோக வர்க்கத்தினர் (திருக்கோயில்கள் திருமடங்கள் தொடங்கிச் செல்வந்தர்கள் ஈறாக) எடுத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது! லெனினோ, தன்னுடைய மனிதாபிமானத்தை உணர்வாக மட்டுமின்றிச் செயற்படுத்தி மனித சமுதாயத்தின் வரலாற்றில் ஒரு திருப்பத்தையே உண்டாக்கியிருக்கிறான். அவனுக்கு முன்பு அன்பைப் பற்றிப் பேசியவர்கள் உண்டு. ஆனால் லெனினோ, அன்பிற்கு ஒர் உயிர்ப்புடைய ஒரு வடிவத்தை வாழ்க்கையில் ஏற்படுத்தி இனம் கண்டு காட்டினான். துன்பமேயில்லாத இன்ப உலகத்தைப் பற்றி-நிலப் பிரபுத்துவத்தின் மடியில் தவழ்ந்து கவிஞர்கள், கற்பனை உறக்கத்தில் பாடியதுண்டு. சொர்க்கலோகக் கற்பனையின் தோன்றிய புராணங்களும் உண்டு. ஆனால் வாழப் பிறந்த மனிதன் மட்டும் அவற்றைக் கண்டதேயில்லை. அதிலும், பலரைத் தம் உழைப்புத் திறனால் வாழ்விக்கும் உழைப்பாளர் வர்க்கம் அன்பின் சுவையை - வாழ்க்கையின் சுவையை முற்றிலும்-முழுதுமாக அனுபவித்துச் சுவையைக் கண்டதேயில்லை. லெனின் கற்பனை உலகின் சுவையை வாழ்க்கையில் எல்லோரும் சுவைக்கக் காட்டிய மேதை.

தாம் இன்புறுவதை மற்றவர்களும் இன்புற வேண்டும் என்று விரும்புவது அறிஞர் கடமை. இது மனித இன ஒழுக்கத்தின் அடிப்படை நியதி. இதனையே திருவள்ளுவர்,

தி.II.8

தி.II.8