பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

117



வள்ளுவத்தில் அறிவியல்

திருவள்ளுவர் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர். ஆயினும் அன்றே வாழ்வியலின் இயல்பை - உயிரியலின் உணர்வை - உயிரினத்தின் தன்மையை நுண்மாண் துழைபுலமையுடன் ஆராய்ந்து ஈடு இணையற்ற பரிசாகத் திருக்குறளை எழுதி உலகத்திற்குத் தந்தார். உயிர் அறிவுத் தன்மை யுடையது; உணரும் இயல்பினது; அனுபவ ஆர்வமுடையது; இயல்பில் குறையுடையது; முயற்சியில் முழுநிறை பெறவல்லது; துணையும் தோழமையும் பெற்று உயரவல்லது என்றெல்லாம் அறிந்து கூறும் பெருமை திருக்குறளுக்கு உரியது.

உடல் எப்படியும் கருவியே. இக் கருவியை இயக்கும் நாயகம் உயிரேயாம். உடலாகிய கருவிக்கும் உணவு உண்டு. நாயகமாகிய உயிருக்கும் உணவு உண்டு. உடலுக்கு ஐம்பூதங்களிடையில் ஐம் பூதங்களின் கூட்டால் விளைந்த உணவே உணவு, உயிருக்கோ, உயிரினத்தின் சிந்தனையில் தோன்றும் கல்வியும் கேள்வியுமே உணவு. கல்வியால், கேள்வியால் மனிதன் குறை நீங்கி நிறை பெற்று வளர்கிறான். இந்த உண்மையை எவருக்கும் புரியும் வகையில் முதலில் எடுத்துணர்த்திய பெருமை திருக்குறளுக்கே உண்டு.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

என்பது குறள்.

ஐம்பூத விளைவு உணவு. அது மிகினும் குறையினும் நோய் செய்யும். ஏன்? உணவாக மட்டுமின்றி ஐம்பூதத் தன்மையிலேயே கூட மிகினும் குறையினும் நோயேயாம். நிலம், நம்மிடத்தில் மட்டுமல்ல, மற்றவரிடத்தில் பகையையும் விளைவிக்கும் தன்மையுடையது. கல்வியும் கேள்வியும்