பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

129


தோன்றி, எய்ப்பும் களைப்பும் ஏற்படாமல் இருப்பதற்கேயாம். அறிவு, ஆற்றலுக்கெல்லாம் மேம்பட்ட ஆற்றல், அறிவு, தலை சிறந்த அரண் அறிவு பிணிக்கு மருந்து, வளர்ச்சிக்கு மழை அறிவு, நாழிகைக்கு நாழிகை வளர்வது; துன்பங்களைத் துவைப்பது; இருளுக்கு ஒளி, உணர்வுக்கு ஊட்டம்; வரலாற்றுக்கு வடிவம் கொடுப்பது. அறிவுடைய மனிதன் எல்லையினும், துன்பம் வராது. அப்படியே வந்தாலும் அவன் அறிவினால் அதனை வெல்லுவான். அறிவு, கடந்த காலத்தைக் கவலையாக்கி அழிவதினின்றும் தடுத்து, இனி எதிர்காலத்தில் ஆவது பற்றி ஆராயத்துரண்டும். இதனை 'அறிவுடையார் ஆவதறிவார்' என்று கூறுகிறது குறள்.

ஆள்வினை

மனிதன் ஆளப் பிறந்தவன்; தம்மினும் மெலியரை ஆள அன்று காணியை, பூமியைக் கண்காணம் செய்து ஆள அன்று. இங்கு ஆளுமை என்பது திறன். சிலர், பலரை ஆளத் துடிப்பார்கள். ஆனால் அவர்களையே அவர்கள் ஆண்டு கொள்ள முடியாது. என்னே, கொடுமை! அச்சு முறிந்த வண்டியில் பாரம் ஏற்றிச் செலுத்த முடியுமோ? அதுபோலத் தன்னாட்சித் திறனற்றவர்கள் எப்படிச் சமுதாய வாழ்க்கையை நடத்த முடியும்? அறிவினை அடுத்த தேவை ஆள்வினை யென்பது வள்ளுவம். சிலர் அல்லற்படுவர்; அழுவர்; கொஞ்சம் மூர்க்க உணர்ச்சி இருக்குமானால், மற்றவர்மீது ஆத்திரமும் படுவர்; அணுகிக் கேட்டால் 'காணி இல்லை; காசு இல்லை; கருவிகள் இல்லை' என்று இன்னும் என்னென்னவோ சொல்வர். திருவள்ளுவர் இந்த சமாதானங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. ஆள்வினையின்றி அவல வாழ்க்கை வாழ்ந்து அழுதுச் சாவ தோடன்றி, மற்றவர் மீது பழியைச் சுமத்தும் மனிதனைப் பார்த்து, "மனிதனே, பழியை நீ மற்றவர் மீது சுமத்தாதே! பூரமன் மீது சுமத்தாதே! பக்கத்தில் இருப்பவர் மீது

தி.II.9

தி.II.9