பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

137


ஒருமைப்பாட்டினை, ஒரு வலிமை பெற்ற அரசினால் மட்டும் காப்பாற்ற முடியாது. அல்லது இந்தி மொழியை எல்லோரும் ஏற்றுக்கொள்ளச் செய்வதனாலும் ஒருமைப் பாடு உருவாக முடியாது. ஒருமைப்பாடு என்பது ஒழுக்கச் சார்புடையது; உள்ளச் சார்புடையது; சிந்தனை மலர்ந்து விளங்க வேண்டியது. இதுவே உண்மையான ஒருமைப்பாடு. இத்தகைய ஒருமைப்பாட்டை உருவாக்கச் சட்டங்கள் மொழிகளை விட, சிந்தனையும், சித்தனையைச் சார்ந்த செம்மையான வாழ்க்கையுமே துணை செய்ய முடியும். மனவிகாரத்துக்கும் வேறு பாட்டுக்கும் வித்திடுகின்ற எந்தக் கருத்துகளையும் மக்கள் எண்ணக்கூட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது; கேட்க வாய்ப்பளிக்கக் கூடாது. மனமாறுபாடுகளும் பகையும் மக்கள் மன்றத்தின் முன் கால்கொள இடங்கொடுக்கக் கூடாது. இத்தகு சீரிய ஒருமைப்பாட்டினை-சிறந்த ஒரு இலக்கியத்தை மக்களைப் பயிலச் செய்து அவ்வழி வாழ வழிநடத்துதலின் மூலமே முடியும். இன்று நம்மிடையில் விளங்கும் இலக்கியங்கள் எல்லாவற்றையும் விட ஒருமைப் பாட்டை உருவாக்கும் இலக்கியமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றேயாம். திருக்குறளில் நாடு உண்டு. ஆனாலும் நாடொடு மோதும் நாடு இல்லை. நல்ல நாட்டுக்கு இலக்கணம் உண்டு. திருக்குறளில் தென்றல் தவழும் பொதிகையைக் காணோம். இமயப் பனிவரையையும் காணோம். தண்ணார்ந்த நெஞ் சுடைய இளங்கோவடிகளும், "காவிரி போற்றுதும்” என்றார். ஆனால், திருவள்ளுவர் எந்தவொரு ஆற்றையும் பாடினா ரில்லை; திருக்குறளில் சாதிகளில்லை. அதற்கேற்ற உயர்வு தாழ்வுகளில்லை. செல்வத்தால் அமையும் எந்தவித ஏற்றத் தாழ்வுகளையும் வள்ளுவர் எந்த நியாய்மும் காட்டி ஒப்புறுதி வழங்கவில்லை. மாறாக "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உழவர் பெருங்குடி மக்களுக்கு உரிமை கொடுத்த நூல், நஞ்சுண்டு அமையும் நயத்தக்க நாகரிகத்தை நற்றமிழில் வடித்துத் தந்த ஒப்பற்ற சமாதான நூல். திருக்குறள் நெறி பரவினால்