பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

143


தங்கிப் பயிலவேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பல பள்ளிகள் அமைவதைவிட மையப்படுத்திய எண்ணிக்கைக்கு உட்பட்ட பள்ளிகளே நலம் தருவன. எண்ணிக்கையில் பள்ளி அதிகமாகும் போது, போதுமான மாண வர்கள் இல்லாமல், வீண் செலவும், சில்லரைச் செலவுகளும் அதிகமாகின்றன. பள்ளிகளை மையப்படுத்தி எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தும்பொழுது, வீண் செலவைத் தவிர்க்க முடியும். அதோடு நூலகம், அறிவியற்கூடம் ஆகியவைகளைச் சிறந்த முறையில் மையப்படுத்துவதில் வேறொரு சிறந்த பயனும் உண்டு. அதாவது தற்போதைய பள்ளி அமைப்பு முறையில் மாணவர்கள் தங்களை யொத்த திறனுடைய மாணவரிடத்திலேயே பழக முடிகிறது. பள்ளிகளை மையப்படுத்தும் பொழுது வேறு பிற பகுதி மாணவர் களிடமும் பழகும் வாய்ப்பு ஏற்படுவதால், கொண்டும், கொடுத்தும் அறிவு-ஆற்றல்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

பொதுவாக நம்முடைய நாடு இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக அரசியலடிமைப்பட்டுக் கிடந்த நாடாகும். ஒரு நாடு அரசியல் அடிமைப்படுவதற்கு ஏதுவாக வேண்டு மானால் அதற்கு முன்பே பலநூறு ஆண்டுகள் அறிவிலும் ஆற்றலிலும் அது முடங்கி முடப்பட்டுப் போயிருந்தால்தான், அரசியல் அடிமைத்தனம் உருவாகும். இந்த வகையில் ஆழச் சிந்தித்தால் நம்முடைய நாடு, கடந்த பல நூற்றாண்டுகளாகச் சிந்தனையிலும், செயலிலும் முடக்குவாதம் கொண்டு அழிந்து இருப்பது தெரியவரும் திருவள்ளுவர். திருநாவுக் கரசர் போன்ற சிறந்த மருத்துவர்களாலும் இந்த முடக்கு வாதத்தை அடக்க முடியவில்லையே என்ற உண்மையை அறியும் பொழுது நமக்கு இரக்கமே மேலிடுகிறது. ஆதலால் கல்வி உலகத்தில் மிகவும் விழிப்புடனும் தீவிர உணர்ச்சி யுடனும் அணுகினாலேயே இந்தத் தலைமுறையிலாவது