பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவு விளக்கமுறுதல்; தூய்மையான அறிவாக மாறுதல்; நல்லுழைப்பில் ஈடுபடுதல், இவையெல்லாம் கற்ற கல்வியின் பயன். வழிபடுதல் என்பது சடங்கு மட்டுமன்று.

வழிபடுதல் என்ற சொல்லுக்கு விளக்கம் வழிப்படுதல் என்பதேயாம்; அதாவது, வழி நிற்றல். ஆதலால், தொடர்ந்து நல்ல நூல்களைக் கற்க வேண்டும். ஓயாது தூய அறிவினனாகிய கடவுளைச் சிந்திக்க வேண்டும். கடவுளைச் சிந்திப்பதன்மூலம் பெறும் தூய்மையை, மானிட உயிர்களுக்கு வழங்க நல்லன நல்கும் உழைப்பை மேற்கொள்ள வேண்டும். உழைப்பு, கடவுளுக்குச் செய்யும் காணிக்கை!

இங்ஙனம் தூய்மையான அறிவு பெற்று வாழ்பவர்கள், நல் உழைப்பின் மூலம் வையகத்திற்கு வாழ்வளிப்பவர்கள்-போற்றத் தக்கவர்கள்.

"கற்றல் கேட்டலுடை யார்பெரி யோர்கழல்
                                            கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மான்
                                             இவனன்றே”

என்பார் திருஞான சம்பந்தர்.

இன்று, கற்றல் என்பது செப்பமான முறையில் அமையவில்லை. ஏட்டுப் படிப்பினும் உயர்ந்தது கற்றல், 'கற்றல்' என்ற செயல் முறையிலேயே சிந்தித்தல், உய்த்துணர்தல், கற்பனை செய்தல் ஆகிய கல்வித் தொடர்பான செயல் முறைகள் யாவும் நிகழவேண்டும். இன்று அத்தகைய கல்வி குறைவு! ஞாலத்தில் உயர்ந்தது கேள்வி! ஆனால், எதைக் கேட்டது! கேட்கத் தகாதனவற்றையெல்லாம் கேட்கவேண்டிய தீவினை நம்மை இன்று பிடித்தாட்டுகிறது.

கதவு போடாக் காதுகளுக்கு ஓயாத தொல்லை. நல்லன போலக் கோள் சொல்லி, பகை மூட்டி வயிறு வளர்ப்போர் இன்று பல்கிப் பெருகி விட்டனர். அதனால்