பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொன்னால், ஒழுக்கம் நிறைந்தவர்களாக மக்கள் வாழ வேண்டும் என்று சொன்னால் வான்துளி வேண்டும் என்று சொல்லுகிறார்.

மக்கள், மக்களாக வாழவேண்டுமானால், அறப் பெருஞ் செல்வராக வாழ வேண்டுமானால், பொய்மை நெறி கடித்து மெய்மைநெறி நின்று வாழ்தல் வேண்டும். இவ்வாறு வாழ மழைபெய்யுமென்று வள்ளுவர் கூறுகின்றார். அவ்வாறு வாழாததன் காரணத்தால்தான் வான் வறண்டுவிட்டது; பெருவளங் குன்றிவிட்டது; கிணறு குளங்கள் சுருங்கிவிட்டன என்று வள்ளுவர் மறைமுகமாக உணர்த்துகின்றார்.

திருவள்ளுவப் பெருந்தகையார் 'புகழ்' என்ற அதிகாரத்தில்,

             வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
             யாக்கை பொறுத்த நிலம்

என்று கூறுகின்றார். புகழ் இல்லாத உடலைத் தாங்கிக் கொண்டிருக்கிறது இந்தப் பூமி, அப்படித்தாங்கிக் கொண்டி ருக்கும் நிலையிருக்குமானால் வளங்குன்றும் என்று சொல்லு கிறார்.

உலகத்திலே வள்ளுவருக்கு, ஏன்? பட்டினத்தடிகளுக் கூடத் தாயன்பு விஞ்சியிருந்தது. மணிவாசகப்பெருமான் "பால் நினைந்துாட்டும் தாயினுஞ் சாலப்பரிந்து நீ" என்று தான் பாடுகின்றார். அந்த அன்பு நிலைக்கு உவமை காட்டு கிறபொழுது தாய்மை வருகிறது. அதனால்தான் இந்த நாட்டிலே எதையெடுத்தாலும் தாய் தாய் என்று வாய்குளிரப் பாடுகின்றோம். வள்ளுவர் இந்தப் பூமியைத் தாய் என்று சொல்லுகிறார்; எண்ணுகிறார். நாமும், வெள்ளையரும், கருப்பரும், சிவப்பரும் எல்லோருமே இந்த அருமைத் தாயின் புதல்வர்கள்! நாம் அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று அவள் ஆசைப்படுகின்றாள். அதன் பெருட்டுப்