பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வள்ளுவன் என்பான் ஓர் பேதை என்று ஒரு பாட்டு உண்டு. இந்த அடியையும் அவர் சான்றாக எடுத்துக் கொண் டார். உலகப் பெரு நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவரை வள்ளுவன் என்று சொல்பவர் பேதை என்று சொல்வது. அவர் இதை வள்ளுவன் வஞ்சகன் ஆகையால்தான் பேதை என்று கூறினார் என்று ஆராய்ச்சி செய்து திருவள்ளுவர் திருக்குறள் செய்யவில்லை என்று முடிவு கட்டி ஆங்கிலத்தில் புத்தகமும் வெளிவந்தவிட்டது. அது எவ்வாறிருந்தால் என்ன? நமக்கு வேண்டுவது திருக்குறள், அதிலே இருக்கிற ஒழுக்கம், வள்ளுவன் என்பான் பேதை என்னும் அடியில் உயர்ந்த கருத்து விளங்குகிறது. கடவுள் நிலையில் அவரை வைத்துப் பேசவேண்டும். யாரேனும், வள்ளுவன்' என்று சொல்வாரானால் பேதை வள்ளுவர் எனச் சொல்லல் வேண்டும். திருவள்ளுவமாலையில் இவ்வாறு சொல்கிறார் ஆசிரியர்.

இதை ஆதாரமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆராய்ச்சி வந்திருக்கிறது. இதை எழுதியவர் ஒரு பட்டதாரி; B.A., B.L., என்ற பட்டம் பெற்றவர். அது எவ்வாறேனும் ஆகுக. நமக்கு வேண்டுவது திருவள்ளுவர் கண்ட ஒழுக்க நெறி; அறநெறி; அன்பு நெறி; பண்பாடு. உலகம் எங்கிருக்கிறது என்று சொல்கிறார்?

          பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
          மண்புக்கு மாய்வது மன்

என்கின்றார்.

நம்நாட்டிலே தாய்மார்கள் மண்ணோடு மண்ணாப் போக என்று சொல்வார்கள், வெஃகாமை பேசிய திருவள்ளுவர் பண்பின்றி இந்த நாட்டில் மனிதர் வாழ முடியாது என்ற காரணத்தாலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். எனவே, வள்ளுவரைப் பாராட்டுகிறோம் என்று சொன்னால் வள்ளுவர் கண்ட பண்பாட்டை நினைவு