பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆகையால் அவர்கள் நாடெங்கும் நிரம்பியிருத்தல் வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் எண்ணியிருப்பார் என நம்புகின்றோம்.

          ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
          சான்றோர் பலர்யான் வாழு மூரே

என்ற அடிகளில் பலர் என்ற சொல்லை வைத்துப் புறநானூற்று ஆசிரியர் இடத்தருகின்றார். இதனாலும் துறவியர் பலர் உளராதல் வேண்டும் என்பது பெறப்படுகின்றது.

இந்த நிலைகளிலே யெல்லாம் திருவள்ளுவர் பேரருளைத்தானே தருகின்றார். அறநெறியைக் காட்டு கின்றார். தமிழகத்தின் பெருமையைத் திருக்குறள் காட்டுகின்றது. தமிழகத்தின் பெருமை திருவள்ளுவரின் திருவடியில் தான் இருக்கிறது.

தமிழன் அன்றையத் தமிழனாகவே வாழ்கிறான்; திருவள்ளுவர் கண்ட தமிழனாகவே வாழ்கிறான் என்ற நிலையைத் தமிழகம் பெறவேண்டும். அந்த உணர்ச்சியைப் பெற முயற்சிக்கின்ற காலத்தில் நாம் பெற்றிருக்கும் பெருமை நம்மால் இன்னும் அதிகமாக வளரும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டு, அந்த உணர்ச்சியைப் பெற முயற்சிக்கின்ற காலத்தில் நாம் பெற்றிருக்கும் பெருமை நம்மால் இன்னும் அதிகமாக வளரும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டு, திருவள்ளுவர் புகழ்பாடி அவர் காட்டிய ஒழுக்க நெறியை, அறநெறியைவிடாது கைப்பிடித்தல் வேண்டும் என்று கூறுகின்றோம்.

               ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம்
               உயிரினு மோம்பப் படும்

இக்குறள் காண்க