பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

199



திருவள்ளுவர் உலகத்தைத் துறந்துவிட்டு விரைவில் மடிந்துபோ என்று சொல்ல ஆசைப்படவில்லை. ஒழுக்கம் விழுப்பந்தரலால் உயிரினும் ஒம்பப்படும் என்று சொல்லுகின்றார். ஆகையால் பொன்னேபோல் போற்றிவாழ அவர் காட்டிய சாதனம் உயிரைவிட ஒழுக்கம் சிறந்தது என்பது தான். இந்த ஒன்றினால் மட்டும் நாம் காட்சியளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு திருவள்ளுவர் கண்ட பண்பாடு, திருவள்ளுவர் கண்ட நாகரிகம், இந்த நாட்டில் நின்று நிலவ திருவள்ளுவரின் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

உலகத்தை இயக்கும் ஆலவாயண்ணலின் திரு வருட்டுனையால் விரைவில் இந்நலன்கள் நிரம்பப் பெறுவோம்; திருவள்ளுவர் கண்ட தமிழகத்தைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் முடித்துக்கொள்கின்றோம்.

அன்புடைய பெருமக்களே! தாய்மார்களே!.

இரண்டொரு மணிநேரங்கழித்துத் திரும்பவும் கடமை யென்ற காரணத்தை முன்னிட்டு மாத்திரம் ஒரு சில சொற்கள் சொல்ல ஆசைப்படுகின்றோம். தலைவர் முடிப்புரை பெரும்பான்மையும் பேசிய அறிஞர்களின் பேச்சையொட்டித்தான் அமைவது இயற்கை. இந்த நிலையிலே, கல்லூரி மாணவர் என்ற பெருக்கு ஏற்ப, ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களின் புதல்வராக இருப்பினும் கல்லூரி மாணவர் என்ற நிலைக்கு ஏற்ப, சொன்மாரி பெய்தார். தந்தையைப்போல் மகனல்லவா?

கல்லூரி மாணவர், உலகத்திலே வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றிவிட்டால் அது ஆச்சரியந்தான். வாழ்க்கையின் அடிப்படை சிந்தனைதான். கல்லூரி மாணவன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கின்ற நிலையில் அவன் என்னவாகிறான்? இதே நிலையில் பேரறிஞனாக