பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறோம்.

பின்னே பண்டித முத்துச்சாமிப் புலவரவர்கள் பேசினார்கள். திருவள்ளுவர் குறளின் முறை, அமைப்பு முறைகள் சிலவற்றைச் சொன்னார். திருவள்ளுவர் அன்பாகச் சொல்ல வேண்டியவற்றை அன்போடு சொல்வார்; அடித்துச் சொல்லவேண்டியதை அடித்துச் சொல்லி விடுவார். அவர் தாம் கூற எடுத்துக்கொண்ட கொள்கைகளைச் சற்றும் பிறழாது வற்புறுத்திக் கூறுகின்ற பண்புநலமுடையவர். வள்ளுவரிடத்திற் காணப்படும் அருமையான பண்பாடு, பெருமையானதாக, உயிர்நாடியாக இருப்பவைகளையெல்லாம் ஓரிடத்திலன்று.இரண்டிடத்திலன்று; மூன்று இடங்களுக்கு அப்பாலுஞ் சொல்வார்.

இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண,
நன்னயஞ் செய்து விடல்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்,
என்ன பயத்ததோ சால்பு

இப்பண்பாட்டைச் சற்றேறக்குறைய ஐந்து குறள்களுக்குமேல் வற்புறுத்தியிருக்கிறார். இப்படிப் பல்வேறிடங்களில் திரும்பத் திரும்பச் சொல்கிற தன்மையால் வள்ளுவரின் ஈடுபாடு புலப்படுகிறது.

உயிர்க்கு ஊதியம் ஒன்று வள்ளுவர் சொல்கிறார். திருநாவுக்கரசுப் பெருமான் ஒரு ஊதியத்தைச் சொல்கிறார். இரண்டும் சொல்லளவில் வெவ்வேறாகத் தோன்றினும் முடிவில் ஒரே கருத்தில்தான் காட்சியளிக்கும். "ஈதல் இசைபட வாழ்தல் அது வல்ல, தூதியமில்லை யுயிர்க்கு” என்று வள்ளுவர் சொல்கிறார். திருநாவுக்கரசப் பெருந்தகை யார் "தொண்டு அலாது உயிர்க்கு ஊதியமில்லை” என்று