பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கொள்வதற்காகவே ஊருணி பிறருக்கு நீரையளிக்கிறது. அதுமட்டுமன்று, ஊருணியைத் தோண்டத் தோண்டத் தண்ணீர் வருகிறது. இது ஒரு அடிப்படை இதுபோல் இன்னது செய்தால் இன்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிக் கொடுப்போர் அவ்வகையினர் என வள்ளுவர் நினைத்திருக்க வேண்டும்.

இனி அதற்கு அடுத்த வகையினரைக் காண்போம். நடுவூரில் ஒரு பயன் மரம்; பிழைப்பற்றவர்க்கெலாம் பிழைப்புக் கிடைக்கும் என்று மக்கள் தேடி வருகின்ற மதுரை மாநகரிலே, பயன் தரும் மரம் இருக்குமானால் போகலாம். ஆனால் நடுவூர் மரத்திற்குக் கொஞ்சம் ஆபத்து. அவர் தண்ணீர் ஊற்றுவார் என்று இவரும், இவர் தண்ணீர் ஊற்றுவார் என்று அவரும் எண்ணி யாவரும் சும்மா இருந்துவிடுவர். ஆனால் யாவரும் குச்சி ஒடிக்க வந்துவிடுவர்; இத்தகைய மரம் வளர்ந்து காய்த்துப் பயன்படும் நிலையில் நம்முடைய கடமையைச் செய்துவிட வேண்டும் என்று எண்ணுவோர். இவ்வகையினர் என்கின்றார் வள்ளுவர்.

இனி மூன்றாம் வகையினரைத்தான் வள்ளுவர் மனமாரப் பாராட்டுகின்றார்; வாயாரப் பாராட்டுகின்றார்; 'பெருந்தகையாளர்' என்று பாராட்டுகின்றார். இதைச் சொல்லும் பொழுது மருந்து நினைவுக்கு வருகிறது. சிலருக்குச் செல்வம் இருக்கும். கொடுக்கமாட்டார்கள்; ஆனால், கொடிறுடைக்கும் கூன்கையர்க்குக் கொடுப்பார்கள். இவ்வாறின்றி எல்லோர்க்கும் பயன் கொடுக்கும் முறையில் கொடுக்குங் கூட்டத்தார்க்கு மருந்து மரத்தை உவமை காட்டுகிறார். அம்மரம் பக்கத்திற் கிடைக்கூடிய மரம்; எளிதாகப் பறிக்கலாம். அவ்வகையில் 'பக்கத்திலிருந்து பயன் தரும் மருந்து மரம்போல்' என்கின்றார். வைத்திய முறையில் சில மரங்களுக்கு ஆபத்துண்டு. வைத்தியர், ஒருவரிடத்தில் 'பட்டையை உரித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடு' என்பர்; மற்றொருவரிடத்தில் 'இலையை