பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழி காட்டி

211


அவர் கண்ட ஒழுக்கம் என்பால் பொருந்துவதாக என்று ஆண்டவனை வாழ்த்தி வாழ்த்தி, திருவள்ளுவர் திருவடியை வாழ்த்தி வாழ்த்தி, திருவள்ளுவர் புகழ் வாழ, திருவள்ளுவர் கண்ட அறம் வளர, உண்மை ஓங்கி மக்கள் அறநெறியில் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம். 'சான்றோர் அவையில் பாம்பும் உய்யும்' என்பதைக் கண்கூடாகக் காணும் அளவில் அருமையான சூழ்நிலையிருந்தது. திருவள்ளுவரின் திருக்குறளை அனுபவித்த உங்களுக்குத் தூய இறவாத இன்ப அன்பை நினைத்துக்கொண்டு திருவள்ளுவர் திருவருள் நமக்குத் துணைசெய்வதாகுக என வாழ்த்திப் பல்வேறு இடங்களுக்குச் சென்று சென்று எண்ணுகிற நிலையில் அத்துணைக் கூட்டங்கள் இருத்தல் கண்டு மகிழ்ச்சியைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.

திருவள்ளுவர் மாளிகை கட்ட எத்தனையோ பெருமக்கள் இருக்கின்றனர். இதை நாம் செய்தால் அவர்களும் செய்வார்கள் என எண்ணித்தான் செய்தோம். உடன் வந்திருக்கும் சைவசித்தாந்தப் புரவலர் அவர்கள் ஏனையோர் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அருமைப் பணியைச் சங்கத்தமிழ் வளர்ந்த மதுரையில் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நிறுத்திக்கொள்கின்றோம்.