பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

213


மகிழத்தக்க நிலையில் அமைந்துள்ளது முதற்குறள். இது மட்டுமா? எல்லா எழுத்துகளிலும் அகரத்தின் ஒலிச்சாயல் உண்டு. அதுபோல எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் தங்கியிருக்கிறான் என்ற குறிப்பு உணரத்தக்கது.

இறைவன் இங்ங்னம் முதலாக இருந்து உலகத்தைத் தோற்றுவித்த இயக்குவானா யினும், அவன் வேண்டுதல் வேண்டாமை யில்லாதவன் என்று திருக்குறள் பேசுகிறது.

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டும் இடும்பை இல

என்பது திருக்குறள். உயிர்கள் உய்யும் பொருட்டு உலக நடைமுறையினை நிகழ்த்தும் இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இல்லையென்றால் என்ன பொருள்? இறைவனுக்குத் தன் சார்பான விருப்பு வெறுப்பு இல்லையென்றே பொருள்! எந்தவொரு விருப்போ அல்லது வெறுப்போ தன்னைப் பற்றியதாக இருக்குமானால் நிறைவுடையதல்ல. உயிர்களுக்கு விருப்பும் வெறுப்பும் உண்டு; அவை பெரும்பாலும் அவர்களைச் சுற்றியே வட்டமிடல் உண்டு. அவர்கள் பிறரை - பிறவற்றை நேசித்து விரும்புவதெல்லாம் தன்னுடைய நலத்திற்குக் காரணமாக இருப்பதனாலேயாம். இதுவே உலகியல் பொதுவிதி. ஆனால், இறைவனோ உலகம் உய்தி பெறுவதற்காகவே ஐந்தொழில் நடத்தி வருகின்றான். இறைவனுடைய திருவுள்ளம் உலக உயிர்களைச் சுற்றியே வட்டமிடுகிறது. அகரமாகிய எழுத்து ஒரு சிறு முழு வட்டத்தில் தொடங்குகிறது. பின் அது கீழே வளைந்து வந்து, மீண்டும் மேல்நோக்கி வளைந்து சென்று, பின் அந்த வளைவுகளைக் கடந்து அண்மையில் ஒரு நேர்க்கோட்டில் முடிகிறது. இறைவன் ஒரு முழு வட்டம் முழு முதல்; குறைவிலா நிறைவு. கோதிலா அழுது; இன்ப அன்பு. ஆயினும் உயிர்களின் நலங்கருதி இரங்கி அவ்வுயிர்கள் செல்லுழித் தானும் வளைந்து சென்று, உயிர்களை அண்மித்து நின்று அறிவித்து, துணையாய் நின்று துறக்கச்